×

பொள்ளாச்சி சம்பவம் – வலுக்கும் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Student protest on Pollachi Issue : பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். பொள்ளாச்சியில், கல்லூரி மாணவிகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை
 
பொள்ளாச்சி சம்பவம் – வலுக்கும் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Student protest on Pollachi Issue : பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சியில், கல்லூரி மாணவிகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொள்ளாச்சி சம்பவம் – வலுக்கும் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

இதைத் தொடர்ந்து, நாடெங்கும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டங்களை தொடங்கியுள்ளனர். நேற்று வேலூர் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர். அதேபோல், கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், பொள்ளாச்சியில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளும் நகராட்சி அலுவலகம் முன்பு கூடி போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் உள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இன்று புதுக்கோட்டையில் கல்லூரி மாணவிகள் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில், சிலரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றினர். அதன்பின் கல்லூரி மாணவிகள் தங்கள் போராட்டத்தை கை விட்டனர். இப்படி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவிகள் பொள்ளாச்சி சம்பவத்திற்கு நீதி கேட்டு போராட்டங்களை முன்னெடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News