×

பொங்கல் ரயில் டிக்கெட் ; இன்று முதல் முன்பதிவு – லிங்க் உள்ளே !

பொங்கல் பண்டிகைக்கு பெருநகரங்களில் இருந்து ஊருக்கு செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்க இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதியன்று பொங்கல் பண்டிகை விடுமுறைத் தொடங்குகிறது. இந்த வார நாட்களில் பொங்கல் பண்டிகை வர இருப்பதால் வாரம் முழுவதும் விடுமுறை எடுக்க பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு ரயிலில் செல்ல முன்பதிவு செய்யும் விதமாக இன்று முதல் முன்பதிவு சேவைத் தொடங்க இருக்கிறது. இன்று காலை 8
 
பொங்கல் ரயில் டிக்கெட் ; இன்று முதல் முன்பதிவு – லிங்க் உள்ளே !

பொங்கல் பண்டிகைக்கு பெருநகரங்களில் இருந்து ஊருக்கு செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்க இருக்கிறது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதியன்று பொங்கல் பண்டிகை விடுமுறைத் தொடங்குகிறது. இந்த வார நாட்களில் பொங்கல் பண்டிகை வர இருப்பதால் வாரம் முழுவதும் விடுமுறை எடுக்க பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு ரயிலில் செல்ல முன்பதிவு செய்யும் விதமாக இன்று முதல் முன்பதிவு சேவைத் தொடங்க இருக்கிறது.

இன்று காலை 8 மணி முதல் தொடங்கும் முன்பதிவில் ஜனவரி 10ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 12ஆம் தேதியும், 11ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 13ஆம் தேதி, ஜனவரி 12ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 14ஆம் தேதியும், ஜனவரி 13ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 15ஆம் தேதியும், ஜனவரி 14ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 16ஆம் தேதியும் தொடங்கும் . அதேப்போல பொங்கல் பண்டிகை முடிந்து ஊருக்கு திரும்புவோருக்கான ஜனவரி 19ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 21ஆம் தேதியும், ஜனவரி 20ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 22ஆம் தேதியும் தொடங்கும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.irctc.co.in/nget/train-search

என்ற இணையதளத்திலும் ஐ.ஆர்.சி.டி.சி மொபைல் ஆப்பிலும் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News