×

தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரி – பொங்கி எழுந்து விஷால்

Actor Vishal – தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்து வருகிறார். விஷால் மீது பல்வேறு மோசடி புகார்களை சில தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர். அவரின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்துக்கு மாவட்ட பதிவாளரான சேகரை தனி அதிகாரியாக தமிழக
 
தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரி – பொங்கி எழுந்து விஷால்

Actor Vishal – தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்து வருகிறார். விஷால் மீது பல்வேறு மோசடி புகார்களை சில தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர். அவரின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்துக்கு மாவட்ட பதிவாளரான சேகரை தனி அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது. எனவே, தேர்தல் முடிந்து புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரை சங்கம் தொடர்பான பிரச்சனை மற்றும் வரசு செலவு கணக்குகளை அவரே கவனிப்பார் எனும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் விஷால் வழக்கு தொடர்ந்துள்ளார். சங்கத்தில் பிளவை ஏற்படுத்தவே தமிழக அரசு தனி அதிகாரியை நியமித்துள்ளது என புகார் கூறியுள்ள விஷால், சேகரின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News