×

அத்திவரதரை பார்க்க போன பெண்ணுக்கு குவா குவா! – வைரல் புகைப்படம்

Athivaradhar Prayer – அத்திவரதை தரிசிக்க சென்ற பெண்ணுக்கு கோவில் அருகிலேயே குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதர் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நீரில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு மக்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து குவிந்து கொண்டு இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று
 
அத்திவரதரை பார்க்க போன பெண்ணுக்கு குவா குவா! – வைரல் புகைப்படம்

Athivaradhar Prayer – அத்திவரதை தரிசிக்க சென்ற பெண்ணுக்கு கோவில் அருகிலேயே குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதர் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நீரில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு மக்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து குவிந்து கொண்டு இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.

அத்திவரதரை பார்க்க போன பெண்ணுக்கு குவா குவா! – வைரல் புகைப்படம்

இந்நிலையில், நேற்று அத்திவரதரை தரிசிக்க வந்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு கோவில் வளாகத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்து ஆம்புலன்ஸில் அவருக்கு அரசு மருத்துவர்கள் பிரசவம் பார்த்தனர். அதில், அவருக்கு அழகிய ஆண்குழந்தை பிறந்தது. அதன்பின், அப்பெண் காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாயும், சேயும் நலமா உள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News