×

அதிமுகவில் இணைந்த ராதாரவி – எல்லாத்துக்கும் நயன்தாராவே காரணம்

நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்ததன் பின்னணி தெரியவந்துள்ளது. திடீர் திருப்பமாக நடிகர் ராதாரவி இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் அவரை நேரில் சந்தித்து அதிமுகவில் அவர் தன்னை இணைத்துக் கொண்டார். கொலையுதிர்காலம் பட விழா மேடையில் நயன்தாரா பற்றி அநாகரீகமாக பேசிய ராதாரவிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுகவில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். எனவே, நயன்தாராவுக்காக தன்னை திமுக கட்சியில் இருந்து நீக்கிவிட்டதே
 
அதிமுகவில் இணைந்த ராதாரவி – எல்லாத்துக்கும் நயன்தாராவே காரணம்

நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்ததன் பின்னணி தெரியவந்துள்ளது.

திடீர் திருப்பமாக நடிகர் ராதாரவி இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் அவரை நேரில் சந்தித்து அதிமுகவில் அவர் தன்னை இணைத்துக் கொண்டார்.

அதிமுகவில் இணைந்த ராதாரவி – எல்லாத்துக்கும் நயன்தாராவே காரணம்

கொலையுதிர்காலம் பட விழா மேடையில் நயன்தாரா பற்றி அநாகரீகமாக பேசிய ராதாரவிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுகவில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். எனவே, நயன்தாராவுக்காக தன்னை திமுக கட்சியில் இருந்து நீக்கிவிட்டதே என கடும் அதிருப்தியில் ராதாரவி இருந்தார். உடனடியாக அதிமுகவில் இணைய வேண்டும் என்பதே அவரின் எண்ணமாக இருந்தது. சரத்குமார் மூலமாக இது எடப்பாடி பழனிச்சாமிக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் நேரம் என்பதால் இப்போது வேண்டாம் என பழனிச்சாமி கூறிவிட்டாராம்..

எனவே, தற்போது தேர்தல் முடிவுகளெல்லாம் வெளியாகி விட்டதால் ராதாரவி அதிமுகவில் இணைந்துள்ளார். எப்படியோ ராதாரவி அதிமுகவில் இணைய நயன்தாரா காரணமாகி விட்டார் என தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News