×

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்..

Saravan Bhavan Rajagopal – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவணபவன் ராஜகோபால் காலமானார். சரவண பவன் ஹோட்டலில் பணி செய்த ஜீவஜோதி என்ற பெண் ஊழியரை மூன்றாவதாக திருமனம் செய்துகொள்ள ஆசைப்பட்டார் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால். இதற்கு தடையாக இருந்த ஜீவஜோதியின் கணவரனான பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படை வைத்து கொலை செய்தார். இது சம்மந்தமான வழக்கில் 2004-ல் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது. அதை எதிர்த்து அவர் 2009 ஆம் ஆண்டு மேல் முறையீடு செய்ய ஆயுள்
 
சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்..

Saravan Bhavan Rajagopal – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவணபவன் ராஜகோபால் காலமானார்.

சரவண பவன் ஹோட்டலில் பணி செய்த ஜீவஜோதி என்ற பெண் ஊழியரை மூன்றாவதாக திருமனம் செய்துகொள்ள ஆசைப்பட்டார் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால். இதற்கு தடையாக இருந்த ஜீவஜோதியின் கணவரனான பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படை வைத்து கொலை செய்தார். இது சம்மந்தமான வழக்கில் 2004-ல் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது.

அதை எதிர்த்து அவர் 2009 ஆம் ஆண்டு மேல் முறையீடு செய்ய ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இந்த தண்டனையை உறுதி செய்தது. மேலும் ஜூலை 7 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரண்டர் ஆகவேண்டும் என உத்தரவிட்டது.

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்..

ஆனால் ராஜகோபால் தனது வயது மற்றும் உடல்நலக்கோளாறு காரணமாக தற்போது சரணடைய இயலாது என்றும் கால அவகாசம் வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நிராகரித்த நீதிபதிகள் உடனே சரணடைய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். ஆனால், உடல் நிலையை காரணம் காட்டி சிறைக்கு செல்ல முடியாது என அவர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. எனவே, ஸ்டாலின் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் தற்போது மரணமடைந்துள்ளார். அவரின் மரணம் அவரின் குடும்பத்தினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News