×

அவமானத்தால் கத்திய ரஜினி; விமான நிலையத்தில் பரபரப்பு!

தூத்துக்குடி தூப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் ரஜினியை பார்த்து யார் நீங்கள் என கேள்வி எழுப்பியது ரஜினிக்கு மிகப்பெரிய அவமானமாக பார்க்கப்படுகிறது. இந்த அவமானத்தால் ரஜினி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கத்தினார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களை சந்திக்க சென்ற ரஜினி காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும், ஸ்டெர்லைட் ஆலைக்கும் ஆதரவாக பேட்டியளித்தார். இதனையடுத்து ரஜினியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ரஜினியை இளைஞர் ஒருவர் யார் நீங்கள் என கேட்டதும்
 
அவமானத்தால் கத்திய ரஜினி; விமான நிலையத்தில் பரபரப்பு!

தூத்துக்குடி தூப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் ரஜினியை பார்த்து யார் நீங்கள் என கேள்வி எழுப்பியது ரஜினிக்கு மிகப்பெரிய அவமானமாக பார்க்கப்படுகிறது. இந்த அவமானத்தால் ரஜினி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கத்தினார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களை சந்திக்க சென்ற ரஜினி காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும், ஸ்டெர்லைட் ஆலைக்கும் ஆதரவாக பேட்டியளித்தார். இதனையடுத்து ரஜினியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ரஜினியை இளைஞர் ஒருவர் யார் நீங்கள் என கேட்டதும் வைரலாகி பரவி வருகிறது. இது ரஜினிக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து திரும்பிய ரஜினி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் காவல்துறையையும், அரசையும் ஆதரித்து பேசுகிறீர்களே என கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த ரஜினிகாந்த் முகத்தை கோபமாக வைத்து வெறிபிடித்தவர் போல, யே யார்யா என கத்தினார்.

வேறு கேள்வி இருக்கா என எரிச்சலடைந்து செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு கிளம்பினார். தூத்துக்குடியில் ரஜினிக்கு ஏற்பட்ட அவமானத்தில் வெளிப்பாடே அவர் செய்தியாளர் சந்திப்பில் கத்தியது என கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News