×

ரஜினிக்கு ஒன்னும் தெரியாது – சுஹாசினி மணிரத்னம் கூறிய ரகசியம்

Suhasini Maniratnam – நடிகர் ரஜினி குறித்து நடிகை சுஹாசினி கூறியுள்ள கருத்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்திரரின் 89வது பிறந்த நாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், இயக்குனர் வசந்த், பார்த்திபன், ரகுமான், சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சுஹாசினி பேசியதாவது: கமல், ரஜினி உள்ளிட்ட பல கலைஞர்களை உருவாக்கியவர் பாலச்சந்தர். ரஜினி நடித்த மூன்று முடிச்சு திரைப்படத்தின் படப்பிடிப்பு எங்கள் வீட்டில்தான் நடந்தது. படப்பிடிப்பு இடைவேளையில்
 
ரஜினிக்கு ஒன்னும் தெரியாது – சுஹாசினி மணிரத்னம் கூறிய ரகசியம்

Suhasini Maniratnam – நடிகர் ரஜினி குறித்து நடிகை சுஹாசினி கூறியுள்ள கருத்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்திரரின் 89வது பிறந்த நாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், இயக்குனர் வசந்த், பார்த்திபன், ரகுமான், சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சுஹாசினி பேசியதாவது:

கமல், ரஜினி உள்ளிட்ட பல கலைஞர்களை உருவாக்கியவர் பாலச்சந்தர். ரஜினி நடித்த மூன்று முடிச்சு திரைப்படத்தின் படப்பிடிப்பு எங்கள் வீட்டில்தான் நடந்தது. படப்பிடிப்பு இடைவேளையில் வெளியில் சென்று சிகரெட் பிடித்துக்கொண்டே நிற்பார். யாரிடமும் அதிகம் பேச மாட்டார். கொஞ்சம் பயப்படுவார். உதவி இயக்குனர் காட்சியை விளக்கி விட்டு மேலே பார் என்றால் ரஜினி கீழே பார்ப்பார். கேட்டால் கால் அரிக்கிறது என்பார். இப்படி சினிமாவை பற்றி எதுவும் தெரியாமல் வந்த ரஜினி பின்னாளில் பெரிய உச்சத்திற்கு சென்றார் என அவர் பேசினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News