×

மருத்துவமனையில் அண்ணனோடு ரஜினி – வைரலாகும் புகைப்படம் !

தனது அண்ணனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வரும் நிலையில் அவரை சென்று பார்வையிட்டுள்ளார் ரஜினிகாந்த். ரஜினியின் வலதுகரமாக அவரது ரசிகர் மன்றங்களைக் கவனித்து வந்தவர் அவரது அண்ணன் சத்யநாராயணா. வயது மூப்பின் காரணமாக அவர் இப்போது அந்த பொறுப்புகளில் இருந்து விலகி ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் முழங்கால் மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனையடுத்து தர்பார் படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூர் சென்றிருந்த ரஜினி அவரது அண்ணைப் பார்ப்பதற்காக இன்று
 
மருத்துவமனையில் அண்ணனோடு ரஜினி – வைரலாகும் புகைப்படம் !

தனது அண்ணனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வரும் நிலையில் அவரை சென்று பார்வையிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

ரஜினியின் வலதுகரமாக அவரது ரசிகர் மன்றங்களைக் கவனித்து வந்தவர் அவரது அண்ணன் சத்யநாராயணா. வயது மூப்பின் காரணமாக அவர் இப்போது அந்த பொறுப்புகளில் இருந்து விலகி ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் முழங்கால் மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனையடுத்து தர்பார் படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூர் சென்றிருந்த ரஜினி அவரது அண்ணைப் பார்ப்பதற்காக இன்று மருத்துவமனைக்கு சென்று அவரை நலம் விசாரித்தார். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் அவரோடு செல்பி எடுத்துக்கொண்ட படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News