×

மோடியின் ஆதரவாளர்களை முட்டாள்கள் என அழைத்த குத்து ரம்யா!

தமிழ், கன்னடத்தில் பிரபலமான நடிகை ரம்யா. திவ்யா ஸ்பந்தனா என அழைக்கப்படும் இவர் சிம்புவின் குத்து படத்தின் அறிமுகம் ஆனதால் இவரை குத்து ரம்யா என்றும் ரசிகர்கள் அழைக்கிறார்கள். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மாண்டியா மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்தார். இப்போது திவ்யா ஸ்பந்தனா காங்கிரஸ் கட்சியில் சோசியல் மீடியா பிரிவின் தலைவியாக உள்ளார். இவர் அடிக்கடி மோடியை
 
மோடியின் ஆதரவாளர்களை முட்டாள்கள் என அழைத்த குத்து ரம்யா!

தமிழ், கன்னடத்தில் பிரபலமான நடிகை ரம்யா. திவ்யா ஸ்பந்தனா என அழைக்கப்படும் இவர் சிம்புவின் குத்து படத்தின் அறிமுகம் ஆனதால் இவரை குத்து ரம்யா என்றும்  ரசிகர்கள் அழைக்கிறார்கள்.

இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மாண்டியா மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்தார்.  இப்போது திவ்யா ஸ்பந்தனா காங்கிரஸ் கட்சியில் சோசியல் மீடியா பிரிவின் தலைவியாக உள்ளார்.

இவர் அடிக்கடி மோடியை விமர்சித்து டுவிட்டரில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது மோடியின் ஆதரவாளர்களை முட்டாள் என பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரது பதிவில், “உங்களுக்கு தெரியுமா? மூன்றில் ஒரு மோடி ஆதரவாளர் அடுத்த இரண்டு பேர் போலவே முட்டாள்” என குறிப்பிடப்பட்டிருக்கும் மீமை ஷேர் செய்துள்ளார்.

இவரது கருத்துக்கு மோடியின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News