×

மீண்டும் இணையும் கவுண்டமணி, செந்தில் – காத்திருக்கு தரமான விருந்து !

தமிழ் சினிமாவில் நகைச்சுவை இரட்டையர்களாக கோலோச்சிய கவுண்டமணியும் செந்திலும் மீண்டும் இணைய இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் 1980 களில் இருந்து 2000 ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமாவின் இன்றியமையாதவைகளாக இருந்தது இரண்டு விஷயங்கள். ஒன்று, இளையராஜாவின் இசை. படம் யார் நடித்ததாக இருந்ததாக இருந்தாலும் இளையராஜாதான் ஹீரோ. அவர் படம்தான் போஸ்டர்களில் இருக்கும். அதேப் போல இன்னொரு அம்சம் கவுண்டமணி செந்தில் நகைச்சுவை. படம் எவ்வளவு மோசமாக இருந்தாலும் இவர்கள் இருவரின் நகைச்சுவைக் காட்சிகளுக்காகவே ஓடிய
 
மீண்டும் இணையும் கவுண்டமணி, செந்தில் – காத்திருக்கு தரமான விருந்து !

தமிழ் சினிமாவில் நகைச்சுவை இரட்டையர்களாக கோலோச்சிய கவுண்டமணியும் செந்திலும் மீண்டும் இணைய இருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் 1980 களில் இருந்து 2000 ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமாவின் இன்றியமையாதவைகளாக இருந்தது இரண்டு விஷயங்கள். ஒன்று, இளையராஜாவின் இசை. படம் யார் நடித்ததாக இருந்ததாக இருந்தாலும் இளையராஜாதான் ஹீரோ. அவர் படம்தான் போஸ்டர்களில் இருக்கும். அதேப் போல இன்னொரு அம்சம் கவுண்டமணி செந்தில் நகைச்சுவை. படம் எவ்வளவு மோசமாக இருந்தாலும் இவர்கள் இருவரின் நகைச்சுவைக் காட்சிகளுக்காகவே ஓடிய படங்கள் உண்டு.

அடுத்த தலைமுறை நடிகர்களின் வரவு மற்றும் வயோதிகம் காரணமாக இருவருமே அதிகமாகப் படங்களில் இப்போது நடிப்பதில்லை. நடித்துக் கொண்டிருந்த கடைசிக் காலத்திலும் இருவரும் சேர்ந்து நடிப்பதை தவிர்த்து வந்தனர். அது தமிழ் சினிமா ரசிகர்களுக்குத்தான் மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. இந்நிலையில் கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் ஒருப் படத்தில் இணைவதற்கான வாய்ப்பு அமைந்துள்ளன.

இவர்கள் இருவரின் நகைச்சுவைக் காட்சிகளுக்கு கிரீடம் வைத்தப் படமான கரகாட்டக்காரன் படத்தின் பாகம் 2 உருவாகி வருகிறது. அதன் இயக்குனரான கங்கை அமரன் முதல் பாகத்தில் நடித்த அனைவரிடமும் அடுத்த பாகத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகக் குறிப்பிட்டார். அப்போது கவுண்டமணி செந்தில் இருவரும் உண்டா என்ற கேள்விக்கு ‘ அவர்கள் இல்லாமல் கரகாட்டக்காரன் 2 எப்படி உருவாகும் ?’ என மகிழ்ச்சியானப் பதிலை கூறியுள்ளார். அதனால் விரைவில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று காத்திருக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News