×

காதல் விவகாரம் – கடலூரில் தேமுதிக நிர்வாகி வெட்டிக் கொலை !

கடலூரில் தன்னுடைய தங்கையைக் காதலித்த வாலிபரை ஆனந்தராஜ் என்பவர் வெட்டிக் கொலை செய்துள்ளார். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் ஜனார்த்தனன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தேமுதிக நிர்வாகியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அதேப் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரின் தங்கையைக் காதலித்துள்ளார். இந்த காதல் விவகாரம் ஆனந்தராஜுக்குத் தெரிய வந்துள்ளது. இது சம்மந்தமாக ஜனார்த்தனை அவர் மிரட்டியுள்ளார். ஆனாலும் ஜனார்த்தனன் தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தராஜ் நேற்று முன்
 
காதல் விவகாரம் – கடலூரில் தேமுதிக நிர்வாகி வெட்டிக் கொலை !

கடலூரில் தன்னுடைய தங்கையைக் காதலித்த வாலிபரை ஆனந்தராஜ் என்பவர் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் ஜனார்த்தனன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தேமுதிக நிர்வாகியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அதேப் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரின் தங்கையைக் காதலித்துள்ளார்.

இந்த காதல் விவகாரம் ஆனந்தராஜுக்குத் தெரிய வந்துள்ளது. இது சம்மந்தமாக ஜனார்த்தனை அவர் மிரட்டியுள்ளார். ஆனாலும் ஜனார்த்தனன் தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தராஜ் நேற்று முன் தினம் இரவு வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஜனார்த்தனனை தனது நண்பர்களோடு ஆனந்தராஜ் கத்தியால் சரமாடியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து வெட்டுக்காயங்களோடு குறிஞ்சிப்பாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜனார்த்தனன் மேல் சிகிச்சைக்காக கடலூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News