×

காலமானார் சரவணபவன் ராஜகோபால் !

சரவணபவன் ஹோட்டலில் வேலை செய்த ஜீவஜோதியை திருமணம் செய்வதற்காக அவரின் கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால். அவரின் மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில், உடல்நிலை காரணம் காட்டி அவர் கால அவகாசம் கேட்டார். ஆனால், அவர் உடனடியாக சரணடையும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தபடியே ஆம்புலன்ஸ் மூலம் கடந்த 9ம் தேதி அவர் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
 
காலமானார் சரவணபவன் ராஜகோபால் !

சரவணபவன் ஹோட்டலில் வேலை செய்த  ஜீவஜோதியை திருமணம் செய்வதற்காக அவரின் கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால். அவரின் மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில், உடல்நிலை காரணம் காட்டி அவர் கால அவகாசம் கேட்டார். ஆனால், அவர் உடனடியாக சரணடையும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தபடியே ஆம்புலன்ஸ் மூலம் கடந்த 9ம் தேதி அவர் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபப்ட்டது. ஆனால், அவரின் உடல்நிலை மோசமடைந்தது. எனவே, தீவிர சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News