×

பொள்ளாச்சி விவகாரம் குறித்து திரை பிரபலங்களின் கருத்து !

பொள்ளாசியில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை குறித்து திரை பிரபலங்கள் தங்களின் ஆதங்களை டிவிட்டரில் வெளிபடுத்தியுள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சில பள்ளி,கல்லூரி மாணவிகளை பேசி மயக்கி 20 பேர் கொண்ட கும்பல் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். இதில் ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் இதுவரை 5 முக்கிய குற்றவாளிகள் கிக்கியுள்ளனர். தற்போது இந்த விவகாரம் தமிழகத்தில் ஆளுங்கட்சியின் மீது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில்
 
பொள்ளாச்சி விவகாரம் குறித்து திரை பிரபலங்களின் கருத்து !

பொள்ளாசியில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை குறித்து திரை பிரபலங்கள் தங்களின் ஆதங்களை டிவிட்டரில் வெளிபடுத்தியுள்ளனர். 

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சில பள்ளி,கல்லூரி மாணவிகளை பேசி மயக்கி 20 பேர் கொண்ட கும்பல் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். இதில் ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்  பேரில் இதுவரை 5 முக்கிய குற்றவாளிகள் கிக்கியுள்ளனர். தற்போது இந்த விவகாரம் தமிழகத்தில் ஆளுங்கட்சியின் மீது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் திரை துறையினர் பொள்ளாச்சி விவாகாரம் குறித்து தங்களின் ஆக்ரோசத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி விவகாரம் குறித்து திரை பிரபலங்களின் கருத்து !

மனித போர்வையில் மிருகங்கள். நெஞ்சு பதைக்கிறது. இந்த காம கொடூரர்களுக்கு சட்டத்தையும் மிஞ்சிய தண்டனை வேண்டும். மனிதம் மனதில் ஒரு ஓரத்தில் இருந்திருந்தால் கூட இதை செய்திருக்க மாட்டார்கள் என இசையமைப்பாளர் ஹிப் ஆப் தமிழா ஆதி தெரிவித்துள்ளார்.


தேர்தல் நாடகங்கள் மீது அனைவரின் கவனமும் இருப்பது வெட்கமாகவும், வேதனையாகவும் உள்ளது என நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அந்த ஆண்களை மிருகங்களுடன் ஒப்பிடக் கூடாது. ஏனென்றால் இதற்கு முன்பு இதுபோன்று மோசமான ஆட்களை பார்த்தது இல்லை. அவர்கள் வாழத் தகுதி இல்லாதவர்கள் என பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பல திரை பிரபலங்கள் இந்த விவகாரம் குறித்து தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News