×

அஜித்துக்கு அறிவுரை கூறிய சீமான் – ஏற்பார்களா ரசிகர்கள்?

அஜித் கட் அவுட்டுக்கு அவரின் ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதை நாம் தமிழர் சீமான் கடுமையாக கண்டித்துள்ளார். ரஜினி, அஜித், விஜய், சிம்பு உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது ரசிகர்கள் தியேட்டரில் பேனர் வைப்பது, கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்வது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.சமீபத்தில் கூட விஸ்வாசம் படம் வெளியான திரையரங்குகளில் இருந்த கட் அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர். அப்படி செய்த போது கட் அவுட் சரிந்து விழுந்து ஒரு ரசிகர் இறந்து போனார்.
 
அஜித்துக்கு அறிவுரை கூறிய சீமான் – ஏற்பார்களா ரசிகர்கள்?

அஜித் கட் அவுட்டுக்கு அவரின் ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதை நாம் தமிழர் சீமான் கடுமையாக கண்டித்துள்ளார்.

ரஜினி, அஜித், விஜய், சிம்பு உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது ரசிகர்கள் தியேட்டரில் பேனர் வைப்பது, கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்வது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.சமீபத்தில் கூட விஸ்வாசம் படம் வெளியான திரையரங்குகளில் இருந்த கட் அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர். அப்படி செய்த போது கட் அவுட் சரிந்து விழுந்து ஒரு ரசிகர் இறந்து போனார். சிலர் காயமடைந்தனர்.

அஜித்துக்கு அறிவுரை கூறிய சீமான் – ஏற்பார்களா ரசிகர்கள்?

இந்நிலையில், இதுபற்றி ஒரு கூட்டத்தில் பேசிய சீமான் “விஸ்வாம் படத்தை பார்க்க அதிகாலை 4 மணிக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தியேட்டரில் நிற்கிறார்கள். என்றைக்காவது உங்கள் மண் சார்ந்த, மக்கள் சார்ந்த பிரச்சன்னைகளுக்கு இப்படி நின்றுள்ளீர்களா? பால் என்பது ஏழைகளின் முக்கிய உணவு. அதை கட் அவுட்டில் ஊற்றுகிறார்கள். அது நாகரீகமற்ற செயல். ரஜினியும், அஜித்தும் இதுபற்றி பேசுவதே இல்லை. அவர்கள் தங்களின் ரசிகர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். ஆனால், வாய் மூடி மவுனம் காக்கின்றனர். தமிழிசை பேசியதும் உடனே அறிக்கை கொடுத்தது போல், இந்த விஷயத்திலும் அஜித் பேச வேண்டும். மற்ற மாநிலத்தவர்கள் நம்மை பார்த்து சிரிக்கிறார்கள். கேரளாவில் மம்முட்டி, மோகன்லால் படம் வெளியாகும் போது யாரும் கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்வது இல்லை” என காட்டமாக விமர்சித்துள்ளார்

From around the web

Trending Videos

Tamilnadu News