×

சிம்புவின் அடுத்த படமும் டிராப் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சிம்பு நடித்து வந்த கன்னட ரீமேக் படமான மஃப்டி படம் கைவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிம்பு நடிப்பில் உருவாக இருந்த மாநாடு படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சிம்புவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதற்கு சிம்பு தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வெளியாகவில்லை. இந்நிலையில் சிம்பு நடிப்பில் பாதிப் படப்பிடிப்பு முடிந்துள்ள கன்னட ரீமேக் படமான மஃப்டி படமும் இப்போது கைவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் தயாரிப்பாளர் ஞானவேல்
 
சிம்புவின் அடுத்த படமும் டிராப் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சிம்பு நடித்து வந்த கன்னட ரீமேக் படமான மஃப்டி படம் கைவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிம்பு நடிப்பில் உருவாக இருந்த மாநாடு படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சிம்புவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதற்கு சிம்பு தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வெளியாகவில்லை.

இந்நிலையில் சிம்பு நடிப்பில் பாதிப் படப்பிடிப்பு முடிந்துள்ள கன்னட ரீமேக் படமான மஃப்டி படமும் இப்போது கைவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்குப் பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் சிம்புவோடு கௌதம் கார்த்திக் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரிசையாக சிம்பு படங்கள் டிராப் ஆகிக்கொண்டே வருவதால் நெட்டிசன்கள் சிம்புவைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் சிம்பு ரசிகர்கள் தலைமறைவாகி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News