×

மீண்டும் செல்போனை தட்டிவிட்ட சிவகுமார் – வைரலாகும் வீடியோ

கடந்த ஆண்டு (2018) மதுரையில் தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவகுமார், தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ராகுல் என்பவரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டதால் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து சிவகுமார் ஒரு வீடியோ பதிவின் மூலம் வருத்தமும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, ராகுலுக்கு ரூ.21,000 மதிப்புள்ள புதிய போனையும் சிவகுமார் சார்பாக நேரில் வழங்கப்பட்டது. இந்நிலையில், இயக்குநரும், நடிகருமான ஈ.ராம்தாஸ் வீட்டின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சிவகுமார். அங்கு தன்னுடன் செல்ஃபி
 
மீண்டும் செல்போனை தட்டிவிட்ட சிவகுமார் – வைரலாகும் வீடியோ

கடந்த ஆண்டு (2018) மதுரையில் தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவகுமார், தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ராகுல் என்பவரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டதால் சர்ச்சையானது.

மீண்டும் செல்போனை தட்டிவிட்ட சிவகுமார் – வைரலாகும் வீடியோ

இதனைத் தொடர்ந்து சிவகுமார் ஒரு வீடியோ பதிவின் மூலம் வருத்தமும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, ராகுலுக்கு ரூ.21,000 மதிப்புள்ள புதிய போனையும் சிவகுமார் சார்பாக நேரில் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இயக்குநரும், நடிகருமான ஈ.ராம்தாஸ் வீட்டின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சிவகுமார். அங்கு தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News