×

பணம் தராததால் தாயைக் கொன்ற மகன் – மனநலம் பாதிக்கபட்டவரா ?

திருப்பூரில் செலவுக்குப் பணம் கேட்ட போது தராத தாயை மகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் காசிப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஆரோக்யமேரி. கணவர் சேகரை சில மாதங்களுக்கு முன் இழந்துவிட்ட மேரி கணவனின் பனியன் தொழிற்சாலையை கவனித்து வருகிறார். இவருக்கு ஹர்ஷித் என்ற மகனும் இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என சொல்லப்படும் ஹர்ஷித் அடிக்கடி தாயிடம் பணம் கேட்டு தொல்லை தந்துள்ளார். நேற்று முன்
 
பணம் தராததால் தாயைக் கொன்ற மகன் – மனநலம் பாதிக்கபட்டவரா ?

திருப்பூரில் செலவுக்குப் பணம் கேட்ட போது தராத தாயை மகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் காசிப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஆரோக்யமேரி. கணவர் சேகரை சில மாதங்களுக்கு முன் இழந்துவிட்ட மேரி கணவனின் பனியன் தொழிற்சாலையை கவனித்து வருகிறார். இவருக்கு ஹர்ஷித் என்ற மகனும் இரு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என சொல்லப்படும் ஹர்ஷித் அடிக்கடி தாயிடம் பணம் கேட்டு தொல்லை தந்துள்ளார். நேற்று முன் தினம் வழக்கம்போல பணம் கேட்டு தொல்லைத்தர மேரி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் கோபமான ஹர்ஷித் அவரைக் கத்தியால் குத்தியுள்ளார்.

மேரியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவர் உயிரிழந்து விட்டதை அறிந்துள்ளனர். பின்னர் போலிஸுக்கு தகவல் தர அவர்கள் ஹர்ஷித்தை கைது செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News