×

ஸ்ரீதேவி மரணம் கொலையா ? – டிஜிபி பேச்சால் திடீர் திருப்பம் !

கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் உயிரிழந்த ஸ்ரீதேவியின் மரணம் கொலையாக இருக்கலாம் என் கேரள டிஜிபி தெரிவித்த கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான நடிகை ஸ்ரீதேவி, உறவினர் திருமணத்தில் பங்கேற்க துபாய் சென்ற போது அங்கு தங்கியிருந்த ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் தவறி விழுந்து 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி மரணமடைந்தார். மேலும் அவர் அப்போது குடித்திருந்ததால் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் ஸ்ரீதேவியின் மரணம் கொலையாக இருக்கலாம் என
 
ஸ்ரீதேவி மரணம் கொலையா ? – டிஜிபி பேச்சால் திடீர் திருப்பம் !

கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் உயிரிழந்த ஸ்ரீதேவியின் மரணம் கொலையாக இருக்கலாம் என் கேரள டிஜிபி தெரிவித்த கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான நடிகை ஸ்ரீதேவி, உறவினர் திருமணத்தில் பங்கேற்க துபாய் சென்ற போது அங்கு தங்கியிருந்த ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் தவறி விழுந்து 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி மரணமடைந்தார். மேலும் அவர் அப்போது குடித்திருந்ததால் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் ஸ்ரீதேவியின் மரணம் கொலையாக இருக்கலாம் என கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் கூறியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது’ எனது நண்பர் உமாடாதன் தடவியல் நிபுணராக பணிபுரிகிறார், நான் அவரிடம் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து பேசிய போது, அது நிச்சயம் கொலையாக இருக்கலாம் என தெரிவித்தார். ஆனால் அதேசமயம் யாராவது ஒருவர் அவரது தலையை பிடித்து தண்ணீரில் முழ்கடித்திருந்தால் மட்டுமே உயிரிழக்க முடியும். ஒருவர் எவ்வளவு குடித்திருந்தாலும் ஒரு அடி தண்ணீரில் மூழ்கி உயிரிழக்க வாய்ப்பில்லை. ‘ என அவர் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News