×

ஸ்ரீரெட்டி வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய நபர்…

Srireddy : நடிகை ஸ்ரீரெட்டி வீட்டில் நுழைந்து தாக்குதல் நடத்திய சினிமா தயாரிப்பாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. இவர் சினிமா தயாரிப்பாளரும், பைனான்சியருமான சுப்ரமணி மீது 3 மாதங்களுக்கு முன்பு ஒரு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். ஆனால், அவர் ஜாமினில் வெளியே வந்துவிட்டார். இந்நிலையில், தற்போது சுப்பிரமணி மீது மீண்டும்
 
ஸ்ரீரெட்டி வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய நபர்…

Srireddy : நடிகை ஸ்ரீரெட்டி வீட்டில் நுழைந்து தாக்குதல் நடத்திய சினிமா தயாரிப்பாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. இவர் சினிமா தயாரிப்பாளரும், பைனான்சியருமான சுப்ரமணி மீது 3 மாதங்களுக்கு முன்பு ஒரு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். ஆனால், அவர் ஜாமினில் வெளியே வந்துவிட்டார்.

இந்நிலையில், தற்போது சுப்பிரமணி மீது மீண்டும் ஸ்ரீரெட்டி புகார் அளித்துள்ளார் அதில், சென்னை வளசரவாக்கனம் அன்பு நகரில் உள்ள ஸ்ரீரெட்டியின் வீட்டிற்குள் குடிபோதையில் தனது உறவினர் ஒருவருடன் நுழைந்த சுப்ரமணி தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியிருந்தார். மேலும், தனது மேனேஜரை அவர்கள் இருவரும் தாக்கியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
எனவே, இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News