×

தொடங்கியது பிக்பாஸ் சீசன் 3 – போட்டியாளர்கள் முழு விவரம் !

கமல்ஹாசனுக்கு சின்னத்திரையின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மனதில் மிகப்பெரிய இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 நேற்றுத் தொடங்கியது. கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. அந்த சீசன் 1 பரவலாக அனைவராலும் கவனம்பெற்றதோடு மட்டுமல்லாமல் தொலைக்காட்சி டி ஆர் பி வரிசையிலும் முக்கிய இடம் பிடித்தது. அதையடுத்து இரண்டாவது சீசன் ஒளிப்பரப்பான போது முந்தைய சீசன் அளவுக்கு வரவேற்புக் கிடைக்கவில்லை என்றாலும் அதுவும் பரவலாகக்
 
தொடங்கியது பிக்பாஸ் சீசன் 3 – போட்டியாளர்கள் முழு விவரம் !

கமல்ஹாசனுக்கு சின்னத்திரையின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மனதில் மிகப்பெரிய இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 நேற்றுத் தொடங்கியது.

கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. அந்த சீசன் 1 பரவலாக அனைவராலும் கவனம்பெற்றதோடு மட்டுமல்லாமல் தொலைக்காட்சி டி ஆர் பி வரிசையிலும் முக்கிய இடம் பிடித்தது. அதையடுத்து இரண்டாவது சீசன் ஒளிப்பரப்பான போது முந்தைய சீசன் அளவுக்கு வரவேற்புக் கிடைக்கவில்லை என்றாலும் அதுவும் பரவலாகக் கவனம் ஈர்த்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சி அதன் சுவாரஸ்யத்திற்காக அதிகமாகப் பார்க்கப்பட்டாலும் சிலர் தொடர்ந்து அதன் மீது அரசியல் விமர்சனங்களை வைத்த வண்ணமே உள்ளனர்.

சென்ற முறையே பிக்பாஸ் மேடையில் கமல் லேசாக அரசியல் பேச ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல் இம்முறையும் அரசியல் தூக்கலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று இரவு சீசன் 3 தொடங்கப்பட்ட நிலையில் அதன் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள்

போட்டியாளர்கள் விவரம்

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு,

இலங்கை தமிழ்ப்பெண் லொஸ்லியா,

நடிகை சாக்சி அகர்வால்,

நடிகை மதுமிதா,

நடிகர் கவின்,

நடிகர் சரவணன்,

நடிகை அபிராமி வெங்கடாச்சலம்,

நடிகை வனிதா விஜயகுமார்,

இயக்குனர் மற்றும் நடிகர் சேரன்,

நடிகை ஷெரின்,

நடிகர் மற்றும் இசைக்கலைஞர் மோகன் வைத்யா,

இலங்கை மாடல் தர்ஷன்,

நடன இயக்குனர் சாண்டி,

மலேசிய மாடல் முகன்ராவ்

மற்றும் நடிகை ரேஷ்மா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News