×

அடிபணிந்த ரஜினி: வருத்தம் தெரிவித்து டுவீட்!

தூத்துக்குடி சம்பவம் குறித்து பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு ஒருமையில் ஏக வசனத்தில் பேசிவிட்டு கோபமாக கிளம்பினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் ரஜினி தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். நேற்று முன்தினம் தூத்துக்குடி சம்பவம் குறித்து விமான நிலையத்தில் பேட்டியளித்த ரஜினிகாந்த் காவல்துறைக்கும், அரசுக்கும் ஆதரவாக பேசினார். மேலும் சமூக விரோதிகளின் ஊடுருவல் காரணமாகத்தான் தூத்துக்குடியில் கலவரம் உருவானதாக விளக்கம் கொடுத்து அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து பத்திரிக்கையாளர்
 
அடிபணிந்த ரஜினி: வருத்தம் தெரிவித்து டுவீட்!

தூத்துக்குடி சம்பவம் குறித்து பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு ஒருமையில் ஏக வசனத்தில் பேசிவிட்டு கோபமாக கிளம்பினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் ரஜினி தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

நேற்று முன்தினம் தூத்துக்குடி சம்பவம் குறித்து விமான நிலையத்தில் பேட்டியளித்த ரஜினிகாந்த் காவல்துறைக்கும், அரசுக்கும் ஆதரவாக பேசினார். மேலும் சமூக விரோதிகளின் ஊடுருவல் காரணமாகத்தான் தூத்துக்குடியில் கலவரம் உருவானதாக விளக்கம் கொடுத்து அதிர்ச்சியளித்தார்.

இதனையடுத்து பத்திரிக்கையாளர் ஒருவர் ரஜினியிடம் அரசுக்கும், காவல்துறைக்கும் ஆதரவாக பேசுகிறீர்களே என கேள்வி எழுப்ப, எரிச்சலடைந்த ரஜினி யோவ்… யார்யா என ஒருமையில் ஏக வசனத்தில் பத்திரிக்கையாளரை பேசிவிட்டு வேறு கேள்வி இருக்காயா என பேசிவிட்டு கோபமாக கிளம்பிவிட்டார்.

இது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ரஜினிக்கு அவப்பெயரை உருவாக்கியது. தங்களை ஒருமையில் பேசியதற்காக பத்திரிக்கையாளர்கள் சங்கம் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.

அடிபணிந்த ரஜினி: வருத்தம் தெரிவித்து டுவீட்!

இந்நிலையில் நேற்று மாலை ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில் பத்திரிகையாளர்களிடம் வருத்தம் தெரிவித்து ஒரு பதிவிட்டுள்ளார். அதில், விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில்,ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன் என கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News