×

ஓரினச்சேர்க்கைக் காதல் வெளியானதால் தற்கொலை ?– மற்றொருவர் சிறையில் !

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரினச்சேர்க்கை காதல் வெளியே தெரிந்ததால் அவமானத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் சூரப்பள்ளியைச் சேர்ந்தவர் மணிகண்டன். அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஈத்தன் காடு எனும் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர்கள் இருவரும் கட்டிடத் தொழிலாளிகளாக வேலை செய்து வருகின்றனர். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் காதலர்களாக யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த விஷயத்தை மகேஷ், மணிகண்டனின் தோழர்களிடம் கசிய விட்டிருக்கிறார். இதனால் மணிகண்டன்
 
ஓரினச்சேர்க்கைக் காதல் வெளியானதால் தற்கொலை ?– மற்றொருவர் சிறையில் !

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரினச்சேர்க்கை காதல் வெளியே தெரிந்ததால் அவமானத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் சூரப்பள்ளியைச் சேர்ந்தவர் மணிகண்டன். அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஈத்தன் காடு எனும் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர்கள் இருவரும் கட்டிடத் தொழிலாளிகளாக வேலை செய்து வருகின்றனர். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இருவரும் காதலர்களாக யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த விஷயத்தை மகேஷ், மணிகண்டனின் தோழர்களிடம் கசிய விட்டிருக்கிறார். இதனால் மணிகண்டன் பலரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் வாட்ஸ் ஆப்பில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ’மகேஷ, என்னைப் பலமுறை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு, என் நண்பர்களிடம் என்னைப் பற்றி சொல்லிவிட்டான். இதனால் பலரும் என்னைப் பற்றி அசிங்கமாகவும்  கேலியாகவும் பேசுகின்ற்னர். என்னுடைய தற்கொலைக்கு மகேஷ்தான் காரணம். நான் இறந்த பின் வந்து அவனைப் பேயாக பழிவாங்குவேன். அம்மா என்னை மன்னித்து விடுங்கள். அடுத்த ஜென்மத்தில் உங்கள் மகனாக வந்து பிறப்பேன். ’ எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து மணிகண்டன் தற்கொலை செய்துகொண்டாரா எனத் தெரியவில்லை. அவரது உடலும் கிடைக்கவில்லை. இந்த வீடியோ ஆதாரத்தை கொண்டு ராஜாக்க மங்கலம் போலிஸார், தற்கொலைக்குத் தூண்டியதாக மகேஷை கைது செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News