×

சென்னையை அச்சுறுத்தும் சுக்கு காபி கொள்ளையர்கள் – பொதுமக்களே உஷார் !

சென்னையில் சுக்குக் காபி விற்பவர்கள் போல வீடுகளை நோட்டம் பார்த்து கொள்ளையடிக்கும் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்ற சில திருட்டு சம்பவங்களை அடுத்து வந்த புகார்களை எடுத்து போலிஸார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். இதையடுத்து சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த போலிஸார் சுரேஷ், சூர்யவிக்ரம் மற்றும் சீனிவாசன் ஆகியோரைக் கைது செய்துள்ளார். விசாரணையில் இவர்கள் அனைவரும் அப்பகுதியில் சுக்குக் காபி விற்பது போல வீடுகளை நோட்டம் பார்த்து
 
சென்னையை அச்சுறுத்தும் சுக்கு காபி கொள்ளையர்கள் – பொதுமக்களே உஷார் !

சென்னையில் சுக்குக் காபி விற்பவர்கள் போல வீடுகளை நோட்டம் பார்த்து கொள்ளையடிக்கும் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்கரணை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்ற சில திருட்டு சம்பவங்களை அடுத்து வந்த புகார்களை எடுத்து போலிஸார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். இதையடுத்து சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த போலிஸார் சுரேஷ், சூர்யவிக்ரம் மற்றும் சீனிவாசன் ஆகியோரைக் கைது செய்துள்ளார்.

விசாரணையில் இவர்கள் அனைவரும் அப்பகுதியில் சுக்குக் காபி விற்பது போல வீடுகளை நோட்டம் பார்த்து கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் உஷாராக இருக்கும் படி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News