×

எனக்கும் சிம்புக்கும் பஞ்சாயத்து செய்து வைத்தது சுந்தர் சி: ராபர்ட்

நடன இயக்குநர் ராபர்ட்டும், நடிகர் சிம்புவும் சிறு வயதிலிருந்தே நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் இணைந்து பல சூப்பர் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள். சமீபத்தில், ராபர்ட்ட நடிப்பில் உருவான `ஒண்டிக்கி ஒண்டி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சிம்பு வரவில்லை. இதனால் மனவருத்தம் அடைந்த ராபர்ட் அந்த மேடையிலேயே சிம்பு வராதது குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்தார். இதனால் வருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டு பேசிக்கொள்ளாமல் இருந்தனர். இந்நிலையில் சிம்பு – ராபர்ட், தற்போது ’வந்தா ராஜாவாதான் வருவேன்’
 
எனக்கும் சிம்புக்கும் பஞ்சாயத்து செய்து வைத்தது சுந்தர் சி:  ராபர்ட்

நடன இயக்குநர் ராபர்ட்டும், நடிகர் சிம்புவும் சிறு வயதிலிருந்தே நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் இணைந்து பல சூப்பர் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள். சமீபத்தில், ராபர்ட்ட நடிப்பில் உருவான `ஒண்டிக்கி ஒண்டி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சிம்பு வரவில்லை. இதனால் மனவருத்தம் அடைந்த ராபர்ட் அந்த மேடையிலேயே சிம்பு வராதது குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்தார். இதனால் வருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டு பேசிக்கொள்ளாமல் இருந்தனர்.

இந்நிலையில் சிம்பு – ராபர்ட், தற்போது ’வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் இணைந்து வேலை பார்த்துள்ளனர்.

இந்தப் படத்தின் ’ரெட் கார்டு’ பாடல் நேற்று முன்தினம் வெளியானது. இந்தப் பாடலில், சிம்புக்கு ராபர்ட் நடனம் சொல்லித்தரும் சில காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து ராபர்ட் கூறுகையில், ‘’எனக்கும் சிம்புவுக்கும் சுந்தர்.சி சார்தான் சமரசம் பண்ணினார்னு சொல்லலாம். இந்த ’ரெட் கார்டு’ பாடலின் ரெக்கார்ட்டிங் முடிஞ்சதுக்கு அப்பறம், ‘இந்தப் பாட்டுக்கு யாரை கோரியோகிராஃபராகப் போடலாம் என சிம்புவுக்கு சுந்தர் சி வாய்ஸ் நோட் அனுப்பியிருக்கிறார். பதிலுக்கு சிம்புவும், ‘எனக்கு ராபர்ட்தான்; ராபர்ட்டுக்கு நான்தான். அதுனால இந்தப் பாட்டை அவரே கோரியோ பண்ணட்டும்’னு வாய்ஸ் நோட் அனுப்பியிருக்கிறார்.

அதை சுந்தர்.சி சார் எனக்கு அனுப்பினார். அந்த ஆடியோவைக் கேட்டதும், என்னால அழுகையை கன்ட்ரோல் பண்ண முடியலை. உடனே சிம்பு வீட்டுக்கு கிளம்புப் போயிட்டேன். சிம்புவை கட்டிப்பிடிச்சு அழுது; ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தேன். இந்தப் பாட்டை நாலு நாள் ஷூட் பண்ணினோம். ரொம்ப நல்லா வந்திருக்கு. பழைய சிம்புவோட டான்ஸை இந்தப் பாட்டுல பார்க்கலாம்’’ என்றார்.

From around the web

Trending Videos

Tamilnadu News