×

எதுவும் பேச முடியவில்லை..சூர்யாவின் நிலையும் அதே.. எஸ்.ஏ.சி பேட்டி

S A Chandrasekar – புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்த சூர்யாவுக்கு எழுந்த எதிர்ப்பு குறித்து நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய நடிகர் சூர்யா ‘30 கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்விக் கொள்கையில் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்? மூன்று வயது குழந்தையால் மூன்று மொழிகளை படிக்க முடியுமா? அனைத்து துறைகளிலும் நுழைவுத் தேர்வு இருக்கும் பட்சத்தில் பள்ளிக் கல்விகளின் நிலை?
 
எதுவும் பேச முடியவில்லை..சூர்யாவின் நிலையும் அதே.. எஸ்.ஏ.சி பேட்டி

S A Chandrasekar – புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்த சூர்யாவுக்கு எழுந்த எதிர்ப்பு குறித்து நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய நடிகர் சூர்யா ‘30 கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்விக் கொள்கையில் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்? மூன்று வயது குழந்தையால் மூன்று மொழிகளை படிக்க முடியுமா? அனைத்து துறைகளிலும் நுழைவுத் தேர்வு இருக்கும் பட்சத்தில் பள்ளிக் கல்விகளின் நிலை? பள்ளிகளின் தரத்தை உயர்த்தாமல், நுழைவுத் தேர்வில் மட்டுமே அரசு ஆர்வம் காட்டுவது ஏன்?” என பல கேள்விகளை அவர் எழுப்பினார்.

எதுவும் பேச முடியவில்லை..சூர்யாவின் நிலையும் அதே.. எஸ்.ஏ.சி பேட்டி

சூர்யாவின் கருத்திற்கு ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால், சமூக வலைத்தளங்களில் பலரும் சூர்யாவின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதோடு #StandwithSuriya என்கிற ஹேஷ்டேக்கையும் உருவாக்கி டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். மேலும், கமல்ஹாசனும் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தலுக்கு வாக்களிக்க வந்த எஸ்.ஏ. சந்திரசேகர் ‘ இங்கு உண்மையையும், நல்ல கருத்துகளையும் பேச முடியவில்லை. பல எதிர்ப்புகள் வருகிறது. இது பலருக்கும் நடந்துள்ளது. தற்போது சூர்யாவுக்கும் நடந்துள்ளது’ என வருத்தத்துடன் கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News