×

கரும்பலகையில் பாலியல் படங்கள் – மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது !

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி கரும்பலகையில் உடலுறவு சம்மந்தப்பட்ட படங்களை வரைந்த ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் படி கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொங்கலம்மன்புரம் கிராமத்தில் அரசு நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் சுரேஷ் என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி கரும்பலகையில் உடலுறவு சம்மந்தப்பட்ட படங்களை வரைந்து பாலியல் பாடம் எடுப்பது போல மாணவிகளுக்கு தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அவர் மீதான இந்த குற்றச்சாட்டை ஏற்று நாமக்கல் மாவட்ட கல்வி
 
கரும்பலகையில் பாலியல் படங்கள் – மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது !

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி கரும்பலகையில் உடலுறவு சம்மந்தப்பட்ட படங்களை வரைந்த ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் படி கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொங்கலம்மன்புரம் கிராமத்தில் அரசு நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் சுரேஷ் என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி கரும்பலகையில் உடலுறவு சம்மந்தப்பட்ட படங்களை வரைந்து பாலியல் பாடம் எடுப்பது போல மாணவிகளுக்கு தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

அவர் மீதான இந்த குற்றச்சாட்டை ஏற்று நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News