×

ஆசிரியை வெட்டிக் கொலை செய்த வாலிபர் தற்கொலை

Murder : ஒருதலைக்காதல் விவகாரத்தில் ஆசிரியை வகுப்பறையிலேயே கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ரம்யா(22). இவரை அதேபகுதியில் வசித்து வந்த ராஜேசேகர் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார். ஆனால், அவரின் காதலை ரம்யா ஏற்கவில்லை. சில மாதங்களுக்கு முன் ரம்யாவின் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று ராஜசேகர் பெண்கேட்டுள்ளார். ஆனால், அப்போதும் ரம்யா திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால்,
 
ஆசிரியை வெட்டிக் கொலை செய்த வாலிபர் தற்கொலை

Murder : ஒருதலைக்காதல் விவகாரத்தில் ஆசிரியை வகுப்பறையிலேயே கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ரம்யா(22). இவரை அதேபகுதியில் வசித்து வந்த ராஜேசேகர் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார். ஆனால், அவரின் காதலை ரம்யா ஏற்கவில்லை. சில மாதங்களுக்கு முன் ரம்யாவின் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று ராஜசேகர் பெண்கேட்டுள்ளார். ஆனால், அப்போதும் ரம்யா திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால், ரம்யா மீது ராஜசேகர் கோபத்தில் இருந்துள்ளார்.

கடந்த 22ம் தேதி காலை ரம்யா பள்ளியில் இருந்த போது, வகுப்பறையிலேயே அவரின் கழுத்தை கத்தியால் அறுத்து ராஜேசேகர் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். எனவே, அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கினார்.

இந்நிலையில், நேற்று காலை சேந்தநாட்டில் உள்ள முந்திரி தோப்பில் ராஜசேகர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News