×

பாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞர் – வெளுத்து வாங்கிய பெண் !

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த நபரை பாதிக்கப்பட்ட பெண் வெளுத்து வாங்கும் காட்சிகள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியில் பழ வியாபாரி ஒருவரின் கிடங்கு உள்ளது. அங்கு அதேப் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு இவர் அடிக்கடி பாலியல் தொல்லைக் கொடுத்து வந்துள்ளார். இதனை யாரிடம் சொல்வது எனத் தெரியாமல் அந்த பெண் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல அந்த பெண்ணிடம் அந்த இளைஞர் சாலையில் சென்ற அந்த
 
பாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞர் – வெளுத்து வாங்கிய பெண் !

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த நபரை பாதிக்கப்பட்ட பெண் வெளுத்து வாங்கும் காட்சிகள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியில் பழ வியாபாரி ஒருவரின் கிடங்கு உள்ளது. அங்கு அதேப் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு இவர் அடிக்கடி பாலியல் தொல்லைக் கொடுத்து வந்துள்ளார். இதனை யாரிடம் சொல்வது எனத் தெரியாமல் அந்த பெண் தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் வழக்கம்போல அந்த பெண்ணிடம் அந்த இளைஞர் சாலையில் சென்ற அந்த பெண்ணுக்குப் பாலியல் தொல்லைக் கொடுக்க அவருக்குப் பாடம் புகட்ட நினைத்த அந்தப் பெண் அவரை கொடவுனுக்கு வர சொல்லியுள்ளார். இதைக் கேட்ட அந்த நபர் ஆசையாக செல்ல அவரை வெளுத்து வாங்க ஆரம்பித்துள்ளார் அந்த பெண். மேலும் அதை வீடியோவாகவும் எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அடிவாங்கிய அந்த நபர் தப்பித்துவிட போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News