×

மாணவிக்குக் காதல் தொல்லைக் கொடுத்த இளைஞன் – கொலையில் முடிந்த கொடூரம் !

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில் தனது மகளுக்கு காதல் தொல்லைக் கொடுத்து வந்த இளைஞரை தந்தையொருவர் வெட்டிக் கொலை செய்துள்ளார். திருநெல்வெலி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை அடுத்து உள்ள டி ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குட்டி. இவருடைய மகள் அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு அதேப் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர் காதல் தொல்லைக் கொடுத்துள்ளார். கண்ணனை விரும்பாத அந்த மாணவி அவரைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். ஆனாலும் தினமும்
 
மாணவிக்குக் காதல் தொல்லைக் கொடுத்த இளைஞன் – கொலையில் முடிந்த கொடூரம் !

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில் தனது மகளுக்கு காதல் தொல்லைக் கொடுத்து வந்த இளைஞரை தந்தையொருவர் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

திருநெல்வெலி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை அடுத்து உள்ள டி ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குட்டி. இவருடைய மகள் அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு அதேப் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர் காதல் தொல்லைக் கொடுத்துள்ளார்.

கண்ணனை விரும்பாத அந்த மாணவி அவரைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். ஆனாலும் தினமும் அவரை பின் தொடர்ந்த கண்ணன் மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளார். கண்ணனின் செயல்களைத் தடுக்க அவரது தாயாரிடம் காவல்நிலையத்திலும் மாணவியின் தந்தை ஜெயக்குட்டி புகார் அளித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயக்குட்டி கண்ணனிடம் சென்று ஆத்திரமாகத் திட்டியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இதில் கோபத்தில் ஜெயக்குட்டி கண்ணனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இதையடுத்து கண்ணனின் உடலைக் கைப்பற்றிய போலிஸார், உடற்கூறு ஆய்வுக்கு அவரது உடலை அனுப்பியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News