×

கடனை திருப்பி தருவதாக கூறி உல்லாசம் ; வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டிய வாலிபர்

Kodaikanal – வாங்கிய கடனை தருகிறேன் எனக்கூறி அழைத்து சென்று பெண்ணை மிரட்டி கற்பழித்து மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். கொடைக்கானல் ஆனந்தகிரி மாரியம்மன் கோவில் அருகில் உள்ள காம்ப்ளக்சில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருபவர் சசிகுமார்(30). அதே காம்ப்ளக்சில் கவரிங் கடையில் வேலை பார்த்த பெண்ணிடம் அவர் பணம் கடன் வாங்கியுள்ளார். அந்த பெண் பலமுறை கேட்டும் அவர் பணத்தை திருப்பித்தரவில்லை. சமீபத்தில் அவரிடம் பணம் கேட்க அவரின் கடைக்கு அப்பெண் சென்றுள்ளார். ஆனால்,
 
கடனை திருப்பி தருவதாக கூறி உல்லாசம் ; வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டிய வாலிபர்

Kodaikanal – வாங்கிய கடனை தருகிறேன் எனக்கூறி அழைத்து சென்று பெண்ணை மிரட்டி கற்பழித்து மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கொடைக்கானல் ஆனந்தகிரி மாரியம்மன் கோவில் அருகில் உள்ள காம்ப்ளக்சில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருபவர் சசிகுமார்(30). அதே காம்ப்ளக்சில் கவரிங் கடையில் வேலை பார்த்த பெண்ணிடம் அவர் பணம் கடன் வாங்கியுள்ளார்.

அந்த பெண் பலமுறை கேட்டும் அவர் பணத்தை திருப்பித்தரவில்லை. சமீபத்தில் அவரிடம் பணம் கேட்க அவரின் கடைக்கு அப்பெண் சென்றுள்ளார். ஆனால், கடை சாத்தியிருந்தது. எனவே, அவரது செல்போனில் அழைத்துள்ளார்.

அப்போது, தான் வத்தலகுண்டுவில் இருப்பதாகவும், அங்கு வந்தால் உன் பணத்தை தருகிறேன் என சசிகுமார் கூறியுள்ளார். எனவே, அவரை பார்க்க அப்பெண் வத்தலகுண்டு சென்றுள்ளார். தான் ஒரு லாட்ஜில் தங்கியிருப்பதாக கூறை அவரை சசிக்குமார் அங்கு வரவழைத்துள்ளார்.

அதன்பின் அவரை மிரட்டி அங்கேயே கற்பழித்துள்ளார். அப்பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததை செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்ட சசிக்குமார் அதைக்காட்டி, கொடுத்த பணத்தை கேட்டால் இந்த புகைப்படங்களை உனது கணவர் மற்றும் ஊரில் உள்ள அனைவரிடமும் காட்டுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் இதுபற்றி போலீசாரிடம் புகார் அளித்தார். எனவே, வழக்குப்பதிவு செய்த போலீசார் சசிகுமாரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து புகைப்படங்களை கைபற்றி அழித்துவிட்டனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News