×

பெண்ணை காரில் தரதரவென இழுத்து சென்ற கும்பல் – இறுதியில் நேர்ந்த சோகம்

Woman dragged by car – இளம்பெண்ணை கடத்த முயன்று அவரை தரதரவென காரில் இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகில் அமைந்துள்ள கிராமம் கேசவன்பாளையம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் மதியழகன். இவருக்கு இரண்டு மகள்கள். மூத்தவர் கலையரசி. இவர் தனது தங்கையுடன் அருகில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 6ம் தேதி கலைரசி, அவரின் சகோதரி மற்றும் தோழிகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சீறிப்பாய்ந்து
 
பெண்ணை காரில் தரதரவென இழுத்து சென்ற கும்பல் – இறுதியில் நேர்ந்த சோகம்

Woman dragged by car – இளம்பெண்ணை கடத்த முயன்று அவரை தரதரவென காரில் இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகில் அமைந்துள்ள கிராமம் கேசவன்பாளையம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் மதியழகன். இவருக்கு இரண்டு மகள்கள். மூத்தவர் கலையரசி. இவர் தனது தங்கையுடன் அருகில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 6ம் தேதி கலைரசி, அவரின் சகோதரி மற்றும் தோழிகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சீறிப்பாய்ந்து வந்த காரில் இருந்த சிலர் கலையரசியை கடத்த முயன்றனர். ஆனால், அவர்களின் பிடியில் இருந்து கலையரசி தப்ப முயன்றார். ஆனால், அவரை விடாமல் அந்த கும்பல் இழுத்து சென்றது. சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு அவரை அந்த கும்பல் இழுத்து சென்றது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கலையரசியின் தங்கை மற்றும் தோழிகள் கூச்சல் போட்டனர். ஆனால், அது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாக இருந்ததால் யாரும் உதவிக்கு வரவில்லை. ஆனால், தூரத்தில் ஒரு பஸ் வந்ததால், கலையரசியை விட்டு விட்டு காரில் வந்தவர்கள் தப்பி சென்றனர்.

இந்த சம்பவத்தினால் படுகாயமடைந்த கலையரசி திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை விபத்து வழக்காக பதிவு செய்த போலீசார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. எனவே, அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். எனவே, 2 நாட்களில் குற்றவாளிகளை கைது செய்வோம் என போலீசார் உறுதி அளித்தனர். அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News