×

கள்ளக்காதலியைக் கொன்றுவிட்டு கணவனுக்கு செய்தி அனுப்பிய கொடூரன் – புதுக்கோட்டை அருகே நடந்த பயங்கரம் !

புதுக்கோட்டை அருகேயுள்ள பொன்னைப்பட்டியில் கள்ளக்காதலியோடு ஏற்பட்ட பிரச்சனைக் காரணமாக அவரைக் கொன்றுள்ளார் ரங்கையா எனும் நபர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் பெருமாள் மற்றும் பாண்டிச்செல்வி. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. குடும்ப சூழல் காரணமாக பெருமாள் வெளிநாட்டில் வேலைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி பாண்டிச்செல்விக்கும் அந்த ஊரில் கிராம நிரவாக அலுவலரின் உதவியாளரான ரெங்கையா என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்களுக்குத் தெரியாமல் தங்கள்
 
கள்ளக்காதலியைக் கொன்றுவிட்டு கணவனுக்கு செய்தி அனுப்பிய கொடூரன் – புதுக்கோட்டை அருகே நடந்த பயங்கரம் !

புதுக்கோட்டை அருகேயுள்ள பொன்னைப்பட்டியில் கள்ளக்காதலியோடு ஏற்பட்ட பிரச்சனைக் காரணமாக அவரைக் கொன்றுள்ளார் ரங்கையா எனும் நபர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் பெருமாள் மற்றும் பாண்டிச்செல்வி. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. குடும்ப சூழல் காரணமாக பெருமாள் வெளிநாட்டில் வேலைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி பாண்டிச்செல்விக்கும் அந்த ஊரில் கிராம நிரவாக அலுவலரின் உதவியாளரான ரெங்கையா என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்களுக்குத் தெரியாமல் தங்கள் உறவை வளர்த்துள்ளனர். இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி 100 நாள் வேலைக்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்ற பாண்டிச்செல்வி வீடு திரும்பவில்லை. இது சம்மந்தமாக பாண்டிச்செல்வியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக செல்போனுக்கு பெருமாளின் செல்போன் எண்ணுக்கு மெஸேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் ‘உனது மனைவியை நான் கொன்று புதைத்துவிட்டேன். என்னை மன்னித்து விடு’ என இருந்ததைப் பார்த்து பெருமாள் அதிர்ச்சியடைந்துள்ளார். இதை உறவினர்களிடம் தெரிவிக்க போலீஸார் ரெங்கைஇயா கைது செய்து விசாரணை செய்ய ‘ பாண்டிச்செல்வியோடு ஏற்பட்ட சண்டையால் அவரைக் கொலை செய்து வாழைக்குறிச்சி பகுதியில் உள்ள கண்மாயில் புதைத்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதையடுத்துப் போலீஸார் அந்த இடத்தில் தோண்டி பாண்டிச்செல்வியின் பிணத்தை எடுத்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News