×

ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ் – இப்படி கலாய்க்கலாமா கஸ்தூரி?

ஜாக்டோ ஜியோ ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்ற விவகாரத்தை நடிகர் கஸ்தூரி கிண்டலடித்துள்ளார். பழைய ஓய்வூதியம் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பில் உள்ள அரசு ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். பள்ளிக்கு ஆசிரியர்கள் செல்லாததால் மாணவர்களும், அரசு அலுவலங்களில் பணிகள் நடைபெறாமல் பொதுமக்கள் கடும் அவதியை சந்தித்தனர். இந்நிலையில்தான் தங்கள் போராட்டத்தை நேற்று இரவு அவர்கள் வாபஸ் பெற்றனர். தொடக்கம் முதலே ஜாக்டோ ஜியோ
 
ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ் – இப்படி கலாய்க்கலாமா கஸ்தூரி?

ஜாக்டோ ஜியோ ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்ற விவகாரத்தை நடிகர் கஸ்தூரி கிண்டலடித்துள்ளார்.

பழைய ஓய்வூதியம் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பில் உள்ள அரசு ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். பள்ளிக்கு ஆசிரியர்கள் செல்லாததால் மாணவர்களும், அரசு அலுவலங்களில் பணிகள் நடைபெறாமல் பொதுமக்கள் கடும் அவதியை சந்தித்தனர். இந்நிலையில்தான் தங்கள் போராட்டத்தை நேற்று இரவு அவர்கள் வாபஸ் பெற்றனர்.

தொடக்கம் முதலே ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு எதிராக கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து கூறிவந்தார். பல சலுகைகளை பெறும் அரசு ஆசிரியர்கள் செய்யும் போராட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறிவந்தார்.

ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ் – இப்படி கலாய்க்கலாமா கஸ்தூரி?

இந்நிலையில், நேற்று மீண்டும் சில பதிவுகளை அவர் இட்டிருந்தார்.

தற்போது ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்.

மிரட்டலுக்கு பணியாத அரசு என்று EPS அரசுக்கு இன்று பெயர் கிடைத்ததற்கு காரணம், ஜாக்டோ ஜியோவின் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு சிறிதும் இல்லை. இது மக்களின் வெற்றி. மாணவர்களுக்கு ஆறுதல். பாடமெடுப்பவர்களுக்கு பாடம்.

அது என்ன தற்காலிக வாபஸ்?

“சம்பளம் கட் ஆவுது, வேலையும் போயிடும் போல இருக்கு… இப்போ வேணாம். விடுமுறை நாட்களிலே தேர்தல் வரும், அப்போ தேர்தல் பணிக்கு கூப்பிடும்போது நம்ம யாருன்னு காட்டுவோம் பாரு” என்று கறுவினார் நண்பர்.

எனவும் கிண்டலாக அவர் டிவிட் செய்துள்ளார். இவரின் கருத்துகளுக்கு அரசு பணியில் இருக்கும் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News