×

பேண்ட் பாக்கெட்டில் இருந்த கத்தி – வேகமாக எடுத்ததால் நடந்த விபரீதம் !

சென்னை வில்லிவாக்கத்தில் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை எடுக்கும் போது தவறுதலாக வயிற்றில் குத்தி இளைஞர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி சரிதா. இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. மனோகரன் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தினமும் வீட்டில் பிரச்சனை செய்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த சரிதா கோபித்துக்கொண்டு அவரின் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல குடித்துவிட்டு சம்பூர்ணத்தின் வீட்டுக்கு சென்ற மனோகரன் அங்கு அவரது மனைவி
 
பேண்ட் பாக்கெட்டில் இருந்த கத்தி – வேகமாக எடுத்ததால் நடந்த விபரீதம் !

சென்னை வில்லிவாக்கத்தில் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை எடுக்கும் போது தவறுதலாக வயிற்றில் குத்தி இளைஞர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி சரிதா. இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. மனோகரன் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தினமும் வீட்டில் பிரச்சனை செய்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த சரிதா கோபித்துக்கொண்டு அவரின் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல குடித்துவிட்டு சம்பூர்ணத்தின் வீட்டுக்கு சென்ற மனோகரன் அங்கு அவரது மனைவி சரிதா மற்றும் அவரது தாயாரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் சம்பூர்ணம் தன்னுடன் ஹோட்டலில் பணிபுரியும் கேஷியர் ராகவேந்திரா உதவியை நாடியுள்ளார். அவரும் அங்கு வந்து சமாதானம் பேச முயல மனோகரன் யார் பேச்சையும் கேட்காமல் தகராறு செய்து வந்துள்ளார்.

அப்போது திடீரென இடுப்பில் வைத்திருந்த கத்தியை மனோகரன் வேகமாக எடுக்க அது எக்குதப்பாக அவரது வயிற்றைக் கிழித்துள்ளது. ஆனாலும் அவர் அந்தக் கத்தியை ராகவேந்திராவின் நெஞ்சில் குத்திவிட்டு மயங்கியுள்ளார். மனோகரனை மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் இறந்துவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News