×

தனியாக இருந்த சிறுமி ; வீட்டிற்குள் நுழைந்த 4 பேர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

Girl sucide at trivarur – திருவாருர் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் வசித்து வந்த 15 வயது சிறுமி 10ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று அவரின் பெற்றோர்கள் வெளியே சென்றிருந்ததால் வீட்டில் அவர் தனியாக இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் திடீரென வீட்டிற்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய
 
தனியாக இருந்த சிறுமி ; வீட்டிற்குள் நுழைந்த 4 பேர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

Girl sucide at trivarur – திருவாருர் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் வசித்து வந்த 15 வயது சிறுமி 10ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று அவரின் பெற்றோர்கள் வெளியே சென்றிருந்ததால் வீட்டில் அவர் தனியாக இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் திடீரென வீட்டிற்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க வீட்டிலிருந்து சிறுமி தப்பி ஓடினார். ஒரு காட்டுபகுதிக்குள் ஓடிய அவரை பிடித்து கீழே தள்ளி, அடித்து உதைத்து 4 பேரும் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். அங்கிருந்தும் எப்படியோ தப்பி வீட்டிற்குஓடி வந்த சிறுமி, அவமானம் தாங்க முடியமால் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

உடல் கருகி ஆபத்தான நிலையில் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். போலீசாரின் விசாரணையில் தாஸ், அஜித், விஜய், முருகேசன் உள்ளிட்ட 4 பேர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. எனவே தலைமறைவாக உள்ள 4 பேரையும் கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள 4 பேரையும் கைது செய்ய வேண்டுமென பொதுமக்கள் ஒன்று கூடி அப்பகுதி காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News