×

காதலனோடு தனிமையில் இருந்த பெண் –அத்துமீறிய கும்பல் !

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனது காதலனுடன் தனிமையில் இருந்த பெண்ணை குழுவாக வந்த இளைஞர்கள் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள சின்னமநாயக்கம் பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரு தனியார் ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில் தன்னுடன் ஆலையில் வேலைபார்க்கும் தினேஷ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு தனிமையில் இருக்க காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதிக்கு வந்த 6 பேர் கொண்ட இளைஞர் குழு அவர்களைத்
 
காதலனோடு தனிமையில் இருந்த பெண் –அத்துமீறிய கும்பல் !

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனது காதலனுடன் தனிமையில் இருந்த பெண்ணை குழுவாக வந்த இளைஞர்கள் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள சின்னமநாயக்கம் பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரு தனியார் ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில் தன்னுடன் ஆலையில் வேலைபார்க்கும் தினேஷ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு தனிமையில் இருக்க காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த பகுதிக்கு வந்த 6 பேர் கொண்ட இளைஞர் குழு அவர்களைத் தாக்கியுள்ளது. தினேஷை அடித்துத் துரத்திவிட்டு அந்தப் பெண்ணை மட்டும் வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்று கூட்டு வல்லுறவு செய்ய முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தினேஷ் அருகில் உள்ள ஊருக்கு சென்று பொதுமக்களை அழைத்து வந்துள்ளார். மக்கள் கூட்டத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்த பெண்ணை விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து அந்த பெண் போலிஸில் புகாரளிக்க போலிஸார் சம்மந்தப்பட்ட நபர்களைக் கைது செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News