×

தம்பி மனைவியை ஆபாசமாகத் திட்டிய நபர் – சிறுவனின் விபரீத செயல் !

சேலத்தில் தனது தாயைத் தரக்குறைவாகப் பேசிய பெரியப்பாவை சிறுவன் ஒருவன் கட்டையால் தாக்கிக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது. சேலத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சரவணன் மற்றும் முருகேசன். முருகேசனுக்கு திருமணமாகி 15 வயதில் மகன் ஒருவர் இருக்கிறார். கட்டிடத் தொழிலாளிகளான சரவணனும் முருகேசனும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடப்பது வாடிக்கையாக இருந்துள்ளது. அதெப்போல நேற்றும் சரவணன் குடித்துவிட்டு வந்து முருகேசனையும் அவரது மனைவியையும் ஆபாசமாகப் பேசியுள்ளனர். தனது தாயை ஆபாசமாகப்
 
தம்பி மனைவியை ஆபாசமாகத் திட்டிய நபர் – சிறுவனின் விபரீத செயல் !

சேலத்தில் தனது தாயைத் தரக்குறைவாகப் பேசிய பெரியப்பாவை சிறுவன் ஒருவன் கட்டையால் தாக்கிக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

சேலத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சரவணன் மற்றும் முருகேசன். முருகேசனுக்கு திருமணமாகி 15 வயதில் மகன் ஒருவர் இருக்கிறார். கட்டிடத் தொழிலாளிகளான சரவணனும் முருகேசனும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடப்பது வாடிக்கையாக இருந்துள்ளது.

அதெப்போல நேற்றும் சரவணன் குடித்துவிட்டு வந்து முருகேசனையும் அவரது மனைவியையும் ஆபாசமாகப் பேசியுள்ளனர். தனது தாயை ஆபாசமாகப் பேசியதைக் கேட்ட முருகேசனின் மகன் உருட்டுக்கட்டையால் சரவணனைத் தாக்கியுள்ளான். இதில் சம்பவ இடத்திலேயே சரவணன் உயிரிழந்துள்ளார். தகவலறிந்து அவரது உடலைக் கைப்பற்றிய போலிஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் சிறுவனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News