×

அடுத்தவன் மனைவி மேல் வைத்த ஆசையால் வந்த வினை ! -ரௌடியின் உடல் மட்டுமே மீட்பு… தலையைத் தேடும் போலீஸ்..

சென்னை கொரட்டூரில் அடுத்தவர் மனைவி மேல் ஆசை வைத்த ரௌடி சுரேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் மீது கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் கடந்த 14 ஆம் தேதி முதல் மாயமாகியதை அடுத்து இவரின் தாயார் போலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் சுரேஷுக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த கார்த்திகா என்ற
 
அடுத்தவன் மனைவி மேல் வைத்த ஆசையால் வந்த வினை ! -ரௌடியின் உடல் மட்டுமே மீட்பு… தலையைத் தேடும் போலீஸ்..

சென்னை கொரட்டூரில் அடுத்தவர் மனைவி மேல் ஆசை வைத்த ரௌடி சுரேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் மீது கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் கடந்த 14 ஆம் தேதி முதல் மாயமாகியதை அடுத்து இவரின் தாயார் போலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் சுரேஷுக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த கார்த்திகா என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருந்த விஷயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கார்த்திகாவையும் அவரது கணவரையும் கைது செய்த போலீஸார் நடத்திய விசாரணையில் ‘ சுரேஷ் கார்த்திகாவுடனான உறவை நிறுத்துவதற்கு சம்மதிக்காததால் அவரை வெட்டித் தலைவேறு முண்டம் வேறு என வெவ்வேறு இடங்களில் வீசினோம்’ என ஒத்துக்கொண்டுள்ளார் கார்த்திகாவின் கணவர் ஜெயக்கொடி. இதையடுத்து அவர் சொன்ன இடத்தில் தேடிய போலிஸார் சுரேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் இன்னமும் சுரேஷின் தலைக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News