×

சுடுகாட்டில் பிணத்தை பிய்த்து தின்னும் நபர் – நெல்லையில் அதிர்ச்சி

சுடுகாட்டில் எரியும் பிணங்களை வாலிபர் ஒருவர் வெட்டி தின்னும் சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூருக்கு அருகில் உள்ளது டி.ராமநாதபுரம். இங்கு வசித்து வருபவர் முருகசேன்(45). இவருக்கு மது, கஞ்சா உள்ளிட்ட போதை மருந்து பழக்கம் உண்டு. எனவே, இவரின் மனைவி இவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில், அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் எரியும் பிணங்களை யாரோ ஒரு மர்ம நபர் வெட்டி உண்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்த
 
சுடுகாட்டில் பிணத்தை பிய்த்து தின்னும் நபர் – நெல்லையில் அதிர்ச்சி

சுடுகாட்டில் எரியும் பிணங்களை வாலிபர் ஒருவர் வெட்டி தின்னும் சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூருக்கு அருகில் உள்ளது டி.ராமநாதபுரம். இங்கு வசித்து வருபவர் முருகசேன்(45). இவருக்கு மது, கஞ்சா உள்ளிட்ட போதை மருந்து பழக்கம் உண்டு. எனவே, இவரின் மனைவி இவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

இதற்கிடையில், அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் எரியும் பிணங்களை யாரோ ஒரு மர்ம நபர் வெட்டி உண்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்த விவகாரம் அந்த கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், சமீபத்தில் அந்த கிராமத்தில் ஒரு மூதாட்டி உயிரிழந்தார். எனவே, அவரை அந்த கிராமமக்கள் சுடுகாட்டில் தகனம் செய்தனர். சுடுகாட்டில் பிணங்களை தின்னும் மர்ம நபரை கண்டுபிடிப்பதற்காக சிலர் சுடுகாட்டிலேயே பதுங்கியிருந்தனர். அப்போது, கையில் அரிவாளுடன் வந்த முருகேஷன் மூதாட்டின் பிணத்தில் ஒரு பகுதியை வெட்டி சாப்பிட தொடங்கினார்.

அப்போது அங்கு மறைந்திருந்த பொதுமக்கள் முருகேசனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவருக்கு மன நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக்கருதிய போலீசார் சென்னை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News