×

காரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள் – தெறித்து ஓடிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தங்கள் பகுதிக்கு ஆய்வு செய்ய வராமல், நிவாரணப் பொருட்களை கொண்டுவந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரது காரை பொதுமக்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர். லட்சக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துவிட்டன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளது. இது போக பல விவசாயிகளுக்கு வாழ்வாதாரங்களாக விளங்கிய ஆடு, மாடு, கோழிகள் உயிரிழந்து
 
காரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள் – தெறித்து ஓடிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தங்கள் பகுதிக்கு ஆய்வு செய்ய வராமல், நிவாரணப் பொருட்களை கொண்டுவந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரது காரை பொதுமக்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர். லட்சக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துவிட்டன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளது. இது போக பல விவசாயிகளுக்கு வாழ்வாதாரங்களாக விளங்கிய ஆடு, மாடு, கோழிகள் உயிரிழந்து விட்டன. நெற்பயிர்கள், வாழை, தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டன.

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு உரிய் நிவாரணம் கிடைக்கவில்லை எனக்கூறி நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவரிடம் வாக்குவாதம் செய்த கிராம மக்கள் அவர் வந்த காரை அடித்து நொறுக்கினர்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அதிமுகவினரும், அமைச்சரின் பாதுகாவலர்களும் ஓ.எஸ்.மணியனை மீட்டு வேறு காரில் அவரை அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

From around the web

Trending Videos

Tamilnadu News