×

உறவுக்காரர் வீட்டுக்குள் நுழைந்த இளைஞன் – கம்பத்தில் கட்டிவைத்து அடித்த பொதுமக்கள்

சேலம் அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த வாலிபரைப் பொதுமக்கள் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் சித்தேரியில் உள்ள கூலித் தொழிலாளி ஒருவரின் மனைவி இரவில் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். வெயில் காலம் என்பதால் வீட்டுக்கதவுகளை திறந்துவைத்து கடந்த சில நாட்களாக உறங்கியுள்ளார். இதை நோட்டமிட்ட அந்த பகுதி வாலிபர் ஒருவர் அந்த வீட்டுக்குள் நுழைந்து அந்த பெண்ணிடம் தவறாக அத்துமீறியிருக்கிறார். இதனால் அந்த பெண் அலறவே அக்கம்பக்கத்தினர் எல்லோரும் கூடி
 
உறவுக்காரர் வீட்டுக்குள் நுழைந்த இளைஞன் – கம்பத்தில் கட்டிவைத்து அடித்த பொதுமக்கள்

சேலம் அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த வாலிபரைப் பொதுமக்கள் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சித்தேரியில் உள்ள கூலித் தொழிலாளி ஒருவரின் மனைவி இரவில் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். வெயில் காலம் என்பதால் வீட்டுக்கதவுகளை திறந்துவைத்து கடந்த சில நாட்களாக உறங்கியுள்ளார். இதை நோட்டமிட்ட அந்த பகுதி வாலிபர் ஒருவர் அந்த வீட்டுக்குள் நுழைந்து அந்த பெண்ணிடம் தவறாக அத்துமீறியிருக்கிறார்.

இதனால் அந்த பெண் அலறவே அக்கம்பக்கத்தினர் எல்லோரும் கூடி அந்த இளைஞனைப் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்து வெளுத்துள்ளனர். ஆனால் அந்த இளைஞன் சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு உறவுக்காரன் என்பதால் கண்டித்து அவனை அனுப்பியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News