×

அவள் இறக்க ‘செல்பி’ காரணம் இல்லை – காதலன் பகீர் வாக்குமூலம்

செல்பி எடுக்க முயன்ற போது இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து மரணமடைந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னை பட்டாபிராம் பகுதியில் வசித்து வந்த இளம்பெண் மெர்சி ஸ்டெபி. இவருக்கு அப்பு என்ற வாலிபருடன் காதல் ஏற்பட்டது.இவர்களின் காதலை இரு வீட்டாரும் ஏற்றுக்கொண்ட நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. எனவே, காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கும் ஒன்றாக சென்று வந்தனர். இந்நிலையில், அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்துவிட்டு மெர்சி காதலுடன் வெளியே சென்றுள்ளார். வெல்லஞ்சேரி
 
அவள் இறக்க ‘செல்பி’ காரணம் இல்லை – காதலன் பகீர் வாக்குமூலம்

செல்பி எடுக்க முயன்ற போது இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து மரணமடைந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னை பட்டாபிராம் பகுதியில் வசித்து வந்த இளம்பெண் மெர்சி ஸ்டெபி. இவருக்கு அப்பு என்ற வாலிபருடன் காதல் ஏற்பட்டது.இவர்களின் காதலை இரு வீட்டாரும் ஏற்றுக்கொண்ட நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. எனவே, காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கும் ஒன்றாக சென்று வந்தனர்.

இந்நிலையில், அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்துவிட்டு மெர்சி காதலுடன் வெளியே சென்றுள்ளார். வெல்லஞ்சேரி பகுதியில் ஒரு கிணற்றிற்கு அருகே இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது செல்பி எடுக்க முயன்ற போது ஸ்டெபி கிணற்றில் விழுந்து மரணமடைந்து விட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அதில் உண்மையில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக அவரின் காதலர் அப்பு செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் ‘ அந்த இடத்தில் புகைப்படம் எடுப்போம் எனக்கூறியதால் அங்கு வண்டியை நிறுத்தினேன். அருகிலிருந்த கிணற்றை பார்த்ததும், கீழே இறங்கி காலால் தண்ணீரை தொட வேண்டும் எனக்கூறினார். நான் எனக்கு அவ்வளவாக நீச்சல் தெரியாது. வேண்டாம் என்றேன்.. காதலுக்காக என்னன்னவோ செய்கிறார்கள். நீ இதை செய்ய மாட்டாயா?’ எனக் கூறியதால் நான் கிணற்றில் இறங்கினேன்.

நான் 5 படியில் இறங்கிய போது, ஸ்டெபி 4 வது படியில் கால் வைத்தார். மழை பெய்து ஈரமாக இருந்ததால், பாசி வழுக்கி அவர் கீழே விழுந்தார். அவரை பிடிக்க நானும் கீழே குதித்தேன். கிணற்றின் அடியின் வரை கீழே சென்றும் என்னால் ஸ்டெபியை கண்டுபிடிக்க முடியவில்லை. காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டதும் அங்கு வந்த ஒருவர் என்னை காப்பாற்றினார். இப்படி ஆகும் என நான் நினைக்கவில்லை’ என அழுது கொண்டே பேட்டி கொடுத்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News