×

கல்லூரியில் படிக்கும் போதே மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய திருநாவுக்கரசு! அதிர்ச்சி வாக்குமூலம்

பொள்ளாச்சியில் இளம் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த வாககில் கைது செய்யப்பட்டட முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பல பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஏராளமான பெண்களை பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய கும்பல் பொள்ளாச்சியில் அண்மையில் கைது செய்யப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் திருநாவுக்கரசு ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து காரில்
 
கல்லூரியில் படிக்கும் போதே மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய திருநாவுக்கரசு! அதிர்ச்சி வாக்குமூலம்

பொள்ளாச்சியில் இளம் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த வாககில் கைது செய்யப்பட்டட முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பல பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஏராளமான பெண்களை பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய கும்பல் பொள்ளாச்சியில் அண்மையில் கைது செய்யப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் திருநாவுக்கரசு ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து காரில் மாக்கினாம்பட்டிக்கு வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பொள்ளாச்சி போலீஸ் சூப்பிரண்டு ஜெயராமன், கிழக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் தலைமையிலான போலீசார் மாக்கினாம்பட்டியில் உள்ள அவரது வீட்டின் அருகே தீவிரமாக கண்காணித்தனர். அப்போது நேற்று காலை 10 மணிக்கு திருநாவுக்கரசின் கார் வந்தது.

உடனே போலீசார் காரை தடுத்து நிறுத்தி திருநாவுக்கரசை கைது செய்தனர். பின்னர் அவரை பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே நட்பாகப் பழகும் பெண்களை மயக்கி, ஆபாசமாக படம்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக திருநாவுக்கரசு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த இந்த விவகாரத்தில் தன்னோடு சேர்த்து நான்கு பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக போலீசாரிடம் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். ஏழாவன வீடியோக்கள் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அப்படி எதுவும் இல்லை என்றும் அப்படி ஏதும் இருந்தால் தகவல் தடுக்கப்படும் என்றும் பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயராமன் தெரிவித்தார்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் திருநாவுக்கரசுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அங்குள்ள முதலாவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து திருநாவுக்கரசு கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

From around the web

Trending Videos

Tamilnadu News