×

இந்த முறையும் ஏமாற்றிய எனை நோக்கி பாயும் தோட்டா – தயாரிப்பாளர் வருத்தம் !

இன்று ரிலிஸாவதாக அறிவிக்கப்பட்ட எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தின் ரிலிஸ் தேதி சொல்லாமல் ஒத்திவைக்கப்பட்டது. கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ இன்று ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பணப்பிரச்சனை காரணமாக ரிலிஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்திருக்கும் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவிக்கும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் மதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ’செப்டம்பர் 6 அன்று வெளியாகவிருந்த ’எனை
 
இந்த முறையும் ஏமாற்றிய எனை நோக்கி பாயும் தோட்டா – தயாரிப்பாளர் வருத்தம் !

இன்று ரிலிஸாவதாக அறிவிக்கப்பட்ட எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தின் ரிலிஸ் தேதி சொல்லாமல் ஒத்திவைக்கப்பட்டது.

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’  இன்று ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பணப்பிரச்சனை காரணமாக ரிலிஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏமாற்றம் அடைந்திருக்கும் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவிக்கும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் மதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ’செப்டம்பர் 6 அன்று வெளியாகவிருந்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தை எங்களால் வெளியிட முடியவில்லை. பெரும் முயற்சிகள் பல செய்து இத்திரைப்படத்தை வெளியிட முடியும் என்ற உறுதியோடு பணிபுரிந்த எங்களுக்கும் இது பெரிய ஏமாற்றமாக உணர்ந்து வருகிறோம். மிக விரைவில் அடுத்த சில தினங்களில் வெளியிட மேலும் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

இது நீண்ட பெரும் பயணம் என்பதை நாங்கள் அறிவோம். மறுக்கவில்லை! இதில் ஏற்படும் தாமதத்தினால் உங்களுக்கு ஏற்படும் ஏமாற்றமும் விரக்தியையும் அதன் காரணமாக நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் நாங்கள் அறிவோம். உங்கள் கருத்துக்களை கணக்கில் கொண்டே எங்களது பயணமும் அமைந்துள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் இலக்கை எட்டும் நிலையில் நாங்கள் வேண்டுவது உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே

இந்த நிலையில் நீங்கள் பொறுமையுடன் எங்களையும் இந்த திரைப்படத்தையும் ஆதரிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இத்திரைப்படத்தை திரையரங்கில் நீங்கள் பார்க்கும்போது உங்கள் இத்தனை காத்திருப்பையும் இப்படைப்பு நியாயம் செய்யும் என உளமாற நம்புகிறோம்’ என அறிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News