×

சிறுமியின் உடலெங்கும் சூடு வைத்து சித்ரவதை – கள்ளக்காதலனின் கொடூர செயல் !

வேலூரில் தங்கள் காதலுக்கு இடையூறாக இருந்த சிறுமியை உடலெங்கும் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார் கொடூரமான உள்ளம் கொண்ட ஒருவர். வேலூர் மாவட்டம் அரியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விமலா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவரது ஒரே மகளும் அவரது தாயார் கவனிப்பில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவரின் தனிமையப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த உதயகுமார் எனும் இளைஞன் அவரோடு நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளார். இந்தப் பழக்கம் காதலாக
 
சிறுமியின் உடலெங்கும் சூடு வைத்து சித்ரவதை – கள்ளக்காதலனின் கொடூர செயல் !

வேலூரில் தங்கள் காதலுக்கு இடையூறாக இருந்த சிறுமியை உடலெங்கும் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார் கொடூரமான உள்ளம் கொண்ட ஒருவர்.

வேலூர் மாவட்டம் அரியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விமலா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவரது ஒரே மகளும் அவரது தாயார் கவனிப்பில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவரின் தனிமையப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த உதயகுமார் எனும் இளைஞன் அவரோடு நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளார்.

இந்தப் பழக்கம் காதலாக மாற இருவரும் ஒன்றாக அந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் விமலாவின் தாயார் இறந்துவிட குழந்தை மீண்டும் விமலாவோடு வாழவேண்டிய  சூழல் உருவானது. இது தங்கள் காதல் வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக நினைத்த உதயகுமார் அந்த குழந்தையை சித்ரவதை செய்ய ஆரம்பித்துள்ளார். சிறுமியின் உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்து அவரைக் கொடுமைப் படுத்தியுள்ளார்.

இதனால் அந்த சிறுமி எந்நேரமும் அழுதுகொண்டிருக்க அக்கம்பக்கத்தினர் அவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து போலிஸுக்குத் தகவல் சொல்ல, போலிஸார் அங்கு வந்து உதயகுமார் மற்றும் விமலாவைக் கைது செய்து குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழந்தையின் உடல் முழுவதும் சிகரெட்டால் வைக்கப்பட்ட சூடுகளும், காயம் ஆறாமல் இருக்க அதை மரக்குச்சிகளால் கிண்டி விடப்பட்டிருப்பதும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அனைவர் மத்தியிலும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News