×

மாமனாரின் பாலியல் தொல்லை – மருமகள் உயிரை வாங்கிய சோகம் !

அரக்கோணம் அருகே மாமனாரின் தொடர் பாலியல் தொல்லைக் காரணமாக மருமகள் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் அருகேயுள்ள வெங்கிட்டாபுரம் பகுதியில் வசித்து வருபவர் லாரி ஓட்டுனர் முனிகிருஷ்ணன். இவர் தனது குடும்பம் தந்தையோடு அந்தப் பகுதியில் வசித்து வருகிறார். முனிகிருஷ்ணன் தன் பணிக் காரணமாக அடிக்கடி இரவில் வெளியூர் சென்று விடுவதால் மனைவி யுவராணி தனியாக இருந்துவந்துள்ளார். அந்த நேரத்தில் அவருடைய மாமனார் டில்லி பாபு யுவராணிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்து வந்துள்ளார். இதைப்
 
மாமனாரின் பாலியல் தொல்லை – மருமகள் உயிரை வாங்கிய சோகம் !

அரக்கோணம் அருகே மாமனாரின் தொடர் பாலியல் தொல்லைக் காரணமாக மருமகள் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் அருகேயுள்ள வெங்கிட்டாபுரம் பகுதியில் வசித்து வருபவர் லாரி ஓட்டுனர் முனிகிருஷ்ணன். இவர் தனது குடும்பம் தந்தையோடு அந்தப் பகுதியில் வசித்து வருகிறார். முனிகிருஷ்ணன் தன் பணிக் காரணமாக அடிக்கடி இரவில் வெளியூர் சென்று விடுவதால் மனைவி யுவராணி தனியாக இருந்துவந்துள்ளார்.

அந்த நேரத்தில் அவருடைய மாமனார் டில்லி பாபு யுவராணிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்து வந்துள்ளார். இதைப் பற்றி கணவரிடம் யுவராணிப் புகார் கொடுத்த போதும் அவர் அதை நம்பாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மாமனாரின் பாலியல் தொல்லையாலும் கணவனின் நம்பிக்கையின்மையாலும் மனமுடைந்த யுவராணி தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விவரம் அறிந்து அங்கு விரைந்த போலிஸார் யுவராணியின் உடலைக் கைப்பற்று பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலைக்குக் காரணமான டில்லிபாபுவைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News