×

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் போலீஸ் – வனிதா விஜயகுமார் கைது?

Vanitha Vijayakumar – குழந்தை கடத்தல் புகாரில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வனிதா விஜயகுமாரை போலீசார் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனிதா விஜயகுமார் கடந்த 2007ம் ஆண்டு ஆனந்தராஜ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜெனிதா என்கிற மகள் இருக்கிறார். 2012ம் ஆண்டு வனிதாவும், ஆனந்தராஜும் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்தனர். மகள் ஜெனிதா தந்தையுடன் ஆந்திராவில் வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் ஜெனிதா திடீரென மாயமானர். தனது மகளை ஜெனிதாவை
 
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் போலீஸ் – வனிதா விஜயகுமார் கைது?

Vanitha Vijayakumar – குழந்தை கடத்தல் புகாரில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வனிதா விஜயகுமாரை போலீசார் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வனிதா விஜயகுமார் கடந்த 2007ம் ஆண்டு ஆனந்தராஜ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜெனிதா என்கிற மகள் இருக்கிறார். 2012ம் ஆண்டு வனிதாவும், ஆனந்தராஜும் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்தனர். மகள் ஜெனிதா தந்தையுடன் ஆந்திராவில் வசித்து வந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஜெனிதா திடீரென மாயமானர். தனது மகளை ஜெனிதாவை வனிதா கடத்தி சென்றுவிட்டதாக ஆனந்தராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

தற்போது ஆனந்தராஜ் தெலுங்கானா போலீசாருடன் சென்னை வந்துள்ளார். வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக அந்த வீட்டில் இருப்பதால் பூந்த மல்லி அருகேயுள்ள நசரத்பேட்டை பகுதியில் போலீசார் முகாமிட்டுள்ளனர். அப்பகுதி போலீசாரிடமும் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். விரைவில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வனிதா விஜயகுமாரை போலீசார் கைது செய்வார்கள் என செய்திகள் பரவி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News