×

முடிவுக்கு வந்த பஞ்சாயத்து – தாயுடன் செல்வதாக வனிதா மகள் வாக்குமூலம்

Vanitha Vijayakumar – வனித விஜயகுமார் மீது அவரின் முன்னாள் கணவர் கொடுத்த புகாரின் காரணமாக பிக்பாஸ் வீட்டில் நடந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்துள்ளது. தனது மகள் ஜெனிதாவை வனிதா கடத்தி சென்றுவிட்டதாக தெலுங்கானா மாநிலத்தில் வசிக்கும் வனிதாவின் முன்னாள் கணவர் ஆனந்தராஜ் காவல் நிலையத்தில் அளித்த புகார் தொடர்பாக இன்று சென்னை வந்த தெலுங்கானா போலீசார் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று அவரிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, தனது பாதுகாப்பில்
 
முடிவுக்கு வந்த பஞ்சாயத்து – தாயுடன் செல்வதாக வனிதா மகள் வாக்குமூலம்

Vanitha Vijayakumar – வனித விஜயகுமார் மீது அவரின் முன்னாள் கணவர் கொடுத்த புகாரின் காரணமாக பிக்பாஸ் வீட்டில் நடந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்துள்ளது.

தனது மகள் ஜெனிதாவை வனிதா கடத்தி சென்றுவிட்டதாக தெலுங்கானா மாநிலத்தில் வசிக்கும் வனிதாவின் முன்னாள் கணவர் ஆனந்தராஜ் காவல் நிலையத்தில் அளித்த புகார் தொடர்பாக இன்று சென்னை வந்த தெலுங்கானா போலீசார் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று அவரிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

முடிவுக்கு வந்த பஞ்சாயத்து – தாயுடன் செல்வதாக வனிதா மகள் வாக்குமூலம்

இதைத் தொடர்ந்து, தனது பாதுகாப்பில் இருக்கும் மகளை 5 மணிக்கு பிக்பாஸ் வீட்டிற்கு வரவழைப்பதாக வனிதா தெரிவித்தார். அப்போது அவரின் மகள் யாருடன் வசிக்க ஆசைப்படுகிறாரோ அவருடனோ விட்டுவிடுவது என போலீசார் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி அங்கு வரவழைக்கப்பட்ட வனிதாவின் மகள் ஜெனிதாவிடம் நசரத்பேட்டை காவல்துறையினரும், மனித உரிமை ஆணைய துணை தலைவர் வசுந்தராவும் வாக்குமூலம் பெற்றனர். அப்போது, அவர் தனது தாய் வனிதாவுடன் வசிக்க விரும்புதாக கூறியதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News