×

தம்பியை சுட்டு கொலை செய்த விஜய் ரசிகர் மன்ற தலைவர்…

சொத்துப்பிரச்சனைக்காக சொந்த தம்பியை விஜய் ரசிகர் மன்ற தலைவர் ஒருவர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் பில்லா ஜெகன். இவரின் சகோதரர் சிம்சன். இதில், பில்லா ஜெகன் தூத்துக்குடியில் திமுகவில் ஒரு முக்கிய புள்ளியாக உள்ளார். அதோடு, விஜய் ரசிகர் மன்ற தலைவராகவும் இருக்கிறார். ஒரு சொத்துப்பிரச்சனை தொடர்பாக அவருக்கும், அவரின் தம்பி சிம்சனுக்கும் இடையே நீண்ட வருடங்களாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும்
 
தம்பியை சுட்டு கொலை செய்த விஜய் ரசிகர் மன்ற தலைவர்…

சொத்துப்பிரச்சனைக்காக சொந்த தம்பியை விஜய் ரசிகர் மன்ற தலைவர் ஒருவர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்தவர் பில்லா ஜெகன். இவரின் சகோதரர் சிம்சன். இதில், பில்லா ஜெகன் தூத்துக்குடியில் திமுகவில் ஒரு முக்கிய புள்ளியாக உள்ளார். அதோடு, விஜய் ரசிகர் மன்ற தலைவராகவும் இருக்கிறார். ஒரு சொத்துப்பிரச்சனை தொடர்பாக அவருக்கும், அவரின் தம்பி சிம்சனுக்கும் இடையே நீண்ட வருடங்களாக தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கோபமடைந்த ஜெகன் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து சிம்சனை சுட்டார். இதில், சிம்சன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதன்பின், பில்லா ஜெகன் தலைமறைவாகி விட்டார்.

பில்லா ஜெகன் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு இருப்பதாக கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். சொத்துப்பிரச்சனையில் அண்ணனே தம்பியை சுட்டுக்கொலை செய்த சம்பம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News